15 நிமிடத்தில் 15 மோமோஸ் சாப்பிட்டால் 1 லட்சம் ரூபாய் பரிசு

புது டெல்லி:
டெல்லியில் பிக் மோமோஸ் வேர்ல்ட் என்ற பிரபல உணவகம் ஒன்றில் உணவுப்போட்டி நடத்தபட்டது. இதன்படி 15 நிமிடத்தில் 35 மோமோஸ் சாப்பிடுபவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 
இதில் உள்ள சவால் என்னவென்றால் மோமோஸ் சாப்பிடும்போது வாந்தி எடுக்கக்கூடாது. முழு மோமோக்களையும் மிச்சம் வைக்காமல் சாப்பிட வேண்டும். மேலும் இந்த போட்டி தொடங்குவதற்கு முன் சாப்பிடப்போகும் 35 மோமோஸ்க்கும் கட்டணம் செலுத்தியபின் தான் போட்டி தொடங்கப்படும் என 3 நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.
இந்த போட்டியில் வென்றவர்கள் மீண்டும் மோமோஸ் போட்டியில் கலந்துகொள்ளக்கூடாது எனவும் கூறப்பட்டிருந்தது. இந்த போட்டியில் கலந்துகொண்ட யூடியூப்பர் ‘ஃபுட்டி விஷால்’ 35 மோமோக்களையும் சாப்பிட்டு வெற்றி பெற்றுள்ளார். 1 லட்சம் ரூபாயை வென்ற விஷால் பாதித்தொகையை உணவக உரிமையாளருக்கே திருப்பி அளித்தார். மீதமுள்ள 50 ஆயிரத்தை பணம் தேவையுள்ள பணியாளர் ஒருவருக்கு நன்கொடையாக வழங்கினார்.
இந்த வீடியோவை அவர் யூடியூப்பில் வெளியிட்டார். அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.