கிளாஸான இயக்குனருடன் கைகோர்க்கும் தளபதி ?எதிர்பாராத கூட்டணி..!

விஜய்
தற்போது வம்சி இயக்கத்தில்
தளபதி 66
படத்தில் நடித்துவருகிறார். சமீபத்தில் விஜய் நடிப்பில்
நெல்சன்
இயக்கத்தில்
பீஸ்ட்
திரைப்படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை சந்தித்துள்ளது.

இருப்பினும் பீஸ்ட் படத்தின் வசூல் அமோகமாக உள்ளதாக தகவல்கள் வருகின்றன. இது ஒருபுறமிருக்க தளபதி தற்போது வம்சி இயக்கத்தில் பிசியாக நடித்துவருகிறார். இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா நடிக்க தமன் இசையமைக்கின்றார்.

பாலிவுட் பக்கம் செல்லும் விஜய்?இது நம்ப லிஸ்ட்லயே இல்லையே..!

விஜய்யின் படங்களிலிருந்து சற்று மாறுபட்டு எமோஷனல் கதைக்களத்தில் இப்படம் உருவாவதாக தகவல்கள் வருகின்றது. மேலும் இப்படத்தில் சரத்குமார், மோகன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது.

இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்

இந்நிலையில் தற்போது வந்த தகவலின் படி இயக்குனர் மகிழ் திருமேனி விஜய்யை சந்தித்து ஒரு கதை கூறியுள்ளதாக பேசப்படுகின்றது. சில ஆண்டுகளுக்கு முன்பே மகிழ் திருமேனி விஜய்யை சந்தித்து ஒரு கதை சொன்னதாகவும், விஜய்க்கு மிகவும் பிடித்துப்போனதாகவும் ஒரு தகவல் வந்தது.

விஜய்

இருப்பினும் அந்த சமயத்தில் மகிழ் திருமேனி உதயநிதியின் படத்தில் கமிட்டானதால் விஜய்யின் படத்தை அவரால் இயக்கமுடியாமல் போனதாம். அதன் பிறகு தான் விஜய் நெல்சனின் பீஸ்ட் படத்தில் நடிக்க கமிட்டானார்.

மகிழ் திருமேனி

இந்நிலையில் தற்போது விஜய்யை மகிழ் திருமேனி மீண்டும் சந்தித்து கதை சொல்லியுள்ளாராம். எனவே தளபதி 68 படத்தை மகிழ் திருமேனி இயக்கலாம் என சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தளபதி 66; விஜய் போட்ட கண்டிஷன்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.