ரஷ்யா, உக்ரைன் செல்லும் ஐ.நா., பொது செயலாளார்!

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ரஷ்ய ராணுவம், விமானப்படை, கடற்படை என முப்படைகளும் உக்ரைனைத் தாக்கி வருகின்றன. சர்வதேச கண்டனம், எதிர்ப்பு என எதையும் கண்டு கொள்ளாமல் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், உலக நாடுகள் சில அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. அதேபோல், தங்கள் நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்த நாடுகள் மீது ரஷ்யாவும் பதிலுக்கு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், இரு தரப்புக்கும் இடையே இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் எவ்வித ஆக்கப்பூர்வமாக முடிவுகளும் எட்டப்படவில்லை. இதனிடையே, மரியுபோல் நகரை கைப்பற்றியுள்ள ரஷ்யா, அதற்கு விடுதலை அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில், உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு
ஐக்கிய நாடுகள் சபை
பொது செயலாளர்
ஆன்டனியோ குட்டரெஸ்
செல்லவுள்ளார். வருகிற 26ஆம் தேதி ரஷ்யாவுக்கு சென்று அந்நாட்டின் அதிபர் விளாடிமர் புடினை சந்திக்கவுள்ளார். தொடர்ந்து, வருகிற 29ஆம் தேதி உக்ரைனுக்கு சென்று அந்நாட்டு அதிபர் வோலோடிமர் ஜெலன்ஸ்கியை சந்திக்கவுள்ளார். அவரது வருகையை ரஷ்ய அதிபர் மாளிகை க்ரெம்ளின் உறுதி படுத்தியுள்ளது. உக்ரைன் – ரஷ்ய அதிபர்களுடனான சந்திப்பின் போது போரை நிறுத்துவது பற்றி அவர் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

யப்பா.. ஒரே கம்பெனியில இவ்வளவு வருஷம் வேலையா?- உண்மையில இது சாதனைதான்!

முன்னதாக, இந்த சந்திப்புகளை சாத்தியமாக்க வேண்டும் என்று ரஷ்யா, உக்ரைனுக்கு ஐக்கிய நாடுகள் சபை சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன் இடையேயான அமைதிப் பேச்சு வார்த்தையை தொடங்கிவைப்பதற்காகவே இந்தப் பயணத்தை பொது செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் மேற்கொள்ளவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மிகப்பெரிய அழிவுகளும், விளைவுகளும் ஏற்பட்டுள்ள நிலையில், அமைதியை நிலைநாட்ட வேண்டிய அவசியத்தை எடுத்துரைக்க இந்தப் பயணத்தை பொதுச் செயலாளர் மேற்கொள்ளவுள்ளார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி தாக்குதலைத் தொடங்கியது. போர் தொடங்கியதும் ஒரே ஒரு முறை மட்டும் அதாவது, கடந்த மார்ச் 26 ஆம் தேதியன்று உக்ரைன் அதிபருடன் ஆன்டனியோ குட்டரெஸ் தொலைபேசியில் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.