வளைந்த டிஸ்ப்ளே உடன் வெளியாகும் முதல் Tecno போன்!

சீன நிறுவனமான
டெக்னோ
இந்தியாவில் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. நிறுவனம் பட்ஜெட் விரும்பிகளுக்கு நல்ல விலையில் ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகிறது. தற்போது கிடைத்திருக்கும் தகவல்களின்படி, டெக்னோ புதிய வளைந்த டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது.

இது தொடர்பான டீசரை நிறுவனம் அமேசான் ஷாப்பிங் தளத்தில் வெளியிட்டுள்ளது. தற்போது, இந்த ஸ்மார்ட்போன் அம்சங்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன. அதன்படி, இந்த போனில் மூன்று பின்பக்க கேமராக்கள், ஹீலியோ ஜி95 சிப்செட், 33W பாஸ்ட் சார்ஜிங் ஆகிய ஆதரவுகள் உள்ளன.

டெக்னோ பேன்தோம் எக்ஸ் அம்சங்கள்

வரவிருக்கும் டெக்னோ போனில், 6.7″ இன்ச் Full HD+ அமோலெட் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டிருக்கும். 90Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் இந்த டிஸ்ப்ளேயில் இருக்கும். இது ஒரு வளைந்த டிஸ்ப்ளே வடிவத்தைப் பெறும் என்று கூறப்படுகிறது. வெளியான புகைப்படங்கள் இந்த தகவலை உறுதிபடுத்தியுள்ளன.

இந்த ஸ்மார்ட்போனில் Mediatek ஹீலியோ ஜி95 சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. கிராபிக்ஸ் எஞ்சினாக மாலி G76 கொடுக்கப்பட்டிருக்கும். இது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான HiOS 7.6 மூலம் இயங்குகிறது. இதில் 8ஜிபி LPDDR4x ரேம் வரை இருக்கும். அதனை விர்ச்சுவல் ரேம் மெமரி அம்சத்தின் மூலம் 5ஜிபி கூடுதலாக நீட்டித்துக்கொள்ள முடியும்.

கழிப்பறையை விட போனில் அதிகளவு கிருமிகள் – இன்பினிக்ஸ் Smart 6 அளித்த தீர்வு!

டெக்னோ பேன்தோம் எக்ஸ் கேமரா

இதில் மூன்று பின்பக்க கேமரா கொண்ட அமைப்பு உள்ளது. அதில் முதன்மை சென்சாராக 50MP மெகாபிக்சல் கேமரா, 13MP மெகாபிக்சல் போர்ட்ரேட் சென்சார், 8MP அல்ட்ரா வைட் லென்ஸ் ஆகியன இருக்கும். முன்பக்கம் இரண்டு செல்பி கேமராக்கள் கொடுக்கப்படலாம்.

அதில் ஒன்று 48MP மெகாபிக்சல் ஆகவும், மற்றொன்று 8MP மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ் ஆகவும் இருக்கும். மேலும் இதில் ப்ளூடூத், வைஃபை, டைப்-சி போன்ற இணைப்பு ஆதரவும் கிடைக்கும். இரட்டை 4ஜி சிம் ஆதரவுடன் இது வெளியாகும்.

கையில் மைக்ரோ சிப்! வியக்கவைக்கும் புதிய பேமென்ட் தொழில்நுட்பம்!

டெக்னோ பேன்தோம் எக்ஸ் பேட்டரி

புதிய டெக்னோ ஸ்மார்ட்போனில், 4,700mAh பேட்டரி கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை ஊக்குவிக்க 33W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் வழங்கப்படும். இந்த ஸ்மார்ட்போனில் 256ஜிபி வரை UFS 2.1 ஸ்டோரேஜ் மெமரி வழங்கப்படலாம்.

Starry Night Blue மற்றும் Summer Sunset ஆகிய இரு நிறத் தேர்வுகளில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகும். அமேசான் தளத்தில் மைக்ரோ தளத்தை வெளியிட்ட நிறுவனம், இதன் வெளியீடு குறித்து எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. மேலும், இதன் விலை குறித்து எந்த தகவலும் இதுவரைக் கிடைக்கவில்லை. எனினும், ரூ.20,000க்குள் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tecno-Phantom-X விவரங்கள்முழு அம்சங்கள்ஃபெர்பார்மன்ஸ்MediaTek Helio G95டிஸ்பிளே6.7 inches (17.02 cm)சேமிப்பகம்256 GBகேமரா50 MP + 13 MP + 8 MPபேட்டரி4700 mAhஇந்திய விலை18999ரேம்8 GBமுழு அம்சங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.