#லைவ் அப்டேட்ஸ் உக்ரைன்: அமெரிக்கா, பிரிட்டனால் உக்ரைனுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் அழிப்பு – ரஷியா

27.4.2022
18:00: பிரிட்டனைச் சேர்ந்த 287 பாராளுமன்ற உறுப்பினர்கள் ரஷியாவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 
17:30:  சண்டையை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை நடத்துவதில் கவனம் செலுத்துவது மட்டுமே உக்ரைன் மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு சிறந்த வழி என இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ரஷியா-உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்த விமர்சனத்திற்கும் பதிலளித்தார். ஆசியாவில் – ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் நெருக்கடியை எதிர்கொண்டபோது ஐரோப்பிய நாடுகள் எங்கே போயிருந்தன? என கேள்வி எழுப்பினார் ஜெய்சங்கர்.
16:00: மரியுபோல் எஃகு ஆலையில் பதுங்கியிருந்த உக்ரைன் வீரர்களை ரஷியப் படைகள் தாக்கியதாக உள்ளூர் அதிகாரி பெட்ரோ ஆண்ட்ரியுஷ்சென்கோ கூறி உள்ளார். மரியுபோலில் வெற்றியை அறிவித்த பிறகு, ஆலையை தாக்க வேண்டிய அவசியமில்லை என்று ரஷிய அதிபர் புதின் கூறியபிறகும் வான்வழித் தாக்குதல்கள் கைவிடப்படவில்லை என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

14.52: உக்ரைனில் உள்ள ஜபோரிஜியா அலுமினிய ஆலை அருகே உள்ள கிடங்கில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கு உலக நாடுகளால் உக்ரைனுக்கு வழங்கப்பட்ட ஆயுத தொகுப்புகள் வைக்கப்பட்டிருந்தன. இவற்றை நீண்ட தூரம் கடல் தாண்டி பயணம் செய்யும் காலிபர் ஏவுகணைகள் மூலம் அழித்துள்ளதாக ரஷியா அறிவித்துள்ளது.

06.00: உக்ரைனுடனான பேச்சுவார்த்தை சாதகமான பலனைத் தரும் என நம்புவதாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷியா படையெடுப்பின் ஆரம்ப கட்டத்தில் செர்னோபில் அணுமின் நிலையத்தை ரஷிய ராணுவம் கைப்பற்றியது உலகை பேரழிவின் விளிம்பிற்கு தள்ளியது என உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். 
03.30: நட்பற்ற நாடுகளில் எரிவாயு விற்பனைக்கு ரூபிள் மட்டுமே ஏற்கப்படும் என ரஷிய அதிபர் புதினின் கடந்த மாதம் 25ம் தேதி அறிவிப்பு வெளியிட்டார்.
ரூபிள்களில் கட்டணம் செலுத்த மறுத்ததால் தங்கள் நாடுகளில் இயற்கை எரிவாயு விநியோகத்தை ரஷியா நிறுத்தி வைத்துள்ளது என போலந்து மற்றும் பல்கேரியாவில் உள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். அறிவிப்பு வெளியான ஒரு மாதத்திற்கு பிறகு நட்பற்ற நாடுகளுக்கு எரிவாயு விநியோகத்தை ரஷியா நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
00.45: தனியார் தொலைக்காட்சிக்கு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தற்போது ஜோ பைடனுக்கு பதிலாக தான் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால் உக்ரைனுக்கு எதிரான ரஷிய போரை முடிவுக்கு கொண்டு வந்திருப்பேன். ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அடிக்கடி அணு ஆயுத தாக்குதல் எச்சரிக்கை விடுக்காத வண்ணம் செய்திருப்பேன் என தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.