தஞ்சை : தஞ்சாவூர் களிமேட்டில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினரை நள்ளிரவில் நேரில் சென்று சந்தித்து வி.கே.சசிகலா ஆறுதல் கூறினார். பிறகு பேட்டி அளித்த அவர், இந்த விபத்திற்கு ஆளுங்கட்சியை குறைக்கூறகூடாது என்றார். எதிர்க்கட்சிகள் என்பதால் எதையாவது அவர்கள் கூறிக் கொண்டு தான் இருப்பார்கள் என்று குறிப்பிட்டார்.
