Smart Bottle: ஸ்மார்ட் பாட்டிலை விற்கும் ஆப்பிள் – விலை எவ்வளவு தெரியுமா?

உலக அரங்கில் ஸ்மார்ட்போன் மற்றும் கணினிகள் தயாரிப்பில் முதன்மை நிறுவனமாகத் திகழும்
ஆப்பிள்
, புதிதாக
HidrateSpark PRO
STEEL ஸ்மார்ட் வாட்டர் பாட்டிலை விற்கத் தொடங்கி உள்ளது. இதில் பல்வேறு ஸ்மார்ட் அம்சங்கள் நிறைந்திருப்பதாக நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது.

தொடர்ந்து வளர்ந்து வரும் சுற்றுச்சூழல் அமைப்பைச் சார்த்து, ஆப்பிள் நிறுவனம் மிகவும் விலையுயர்ந்த ஸ்மார்ட் தண்ணீர் பாட்டிலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பாட்டிலின் பெயர் ஹைட்ரேட் ஸ்பார்க் புரோ ஸ்டீல். இது துருப்பிடிக்காத ஸ்டீல் கொண்டு தயாரிக்கப்பட்டது. இது பானங்களை 24 மணிநேரம் வரை குளிர்ச்சியாகவோ அல்லது சூடாகவோ வைத்திருக்கும் திறன் கொண்டது.

ஆப்பிள் ஸ்மார்ட் வாட்டர் பாட்டில் அம்சங்கள்

ப்ளூடூத் வழியாக ஹைட்ரேட் ஸ்பார்க் ஆப்ஸுடன் தங்கள் ஸ்மார்ட் பாட்டில்களை இணைப்பது மட்டுமே பயனர்களின் வேலை. அதன் பின்னர் உங்கள் உடலுக்கு எவ்வளவு தண்ணீர் தேவை என்பதை செயலி கணித்து விடுகிறது. இந்த பாட்டிலின் அடியில் கொடுக்கப்பட்டிருக்கும் எல்இடி ஸ்மார்ட் சென்சார் விளக்குகள் பாட்டிலை ஒளிமையமாக்குகிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் பாட்டிலானது, பயனர்கள் தண்ணீர் குடிப்பதை நினைவூட்டுகிறது. மேலும், அவர்களின் தண்ணீர் உட்கொள்ளலைக் கண்காணிக்கிறது. இதில் கொடுக்கப்பட்டிருக்கும் சென்சாருக்கு ‘Puck’ என பெயரிடப்பட்டுள்ளது. ஆப்பிள் தயாரிப்புகளில் (iPhone, iPad,
Apple Watch
) இதன் செயலியை பயனர்கள் பயன்படுத்தலாம்.

ஸ்மார்ட் ஸ்பீக்கரில் Facetime கேமராவைக் கொண்டுவரும் ஆப்பிள்!

ஆப்பிள் ஹெல்த் ஆப்

ஆப்பிள் பயனர்களின் தனிப்பட்ட உடல்நிலைத் தகவல்களைக் கண்காணிப்பதையும், தினசரி தண்ணீர் குடிக்கும் இலக்கை சரிசெய்வதற்கும் இந்த ஸ்மார்ட் பாட்டில் உதவியாக இருக்கும். இதன் ஒவ்வொரு செயல்பாடுகளையும்
Apple Health
செயலி கண்காணிக்கிறது. ஸ்மார்ட் பாட்டில் ஆப் உடன் இணைந்து ஆப்பிள் ஹெல்த் வேலை செய்கிறது.

ஆப்பிள் ஹெல்த் செயலியில் பயனர்கள் அனைத்து தகவல்களையும் பார்க்க முடியும். ஆப்பிள் வாட்ச் பயன்படுத்துபவர்கள் என்றால் உங்கள் உடலுக்கு என்னென்ன தேவைப்படுகிறது என்பதை ஆப்பிள் ஹெல்த் செயலி சரியாகக் கணிக்கிறது.

ஸ்மார்ட்போன் பயன்பாடு, உடலியல் மாற்றங்கள், தண்ணீர் உட்கொள்ளுதல் என ஆப்பிள் தயாரிப்புகளின் வாயிலாக
Apple
Health அறிந்து கொள்கிறது. உங்களுக்கு தேவையான உணவு, ஆரோக்கியத்தில் கவனம், நீர் அருந்துவது போன்றவற்றை நினைவூட்டுகிறது.

பாட்டில்கள் அழுக்கு மற்றும் கிருமிகளை தங்க விடாமலும் இந்த ஸ்மார்ட் பாட்டில் பார்த்துக்கொள்கிறது. நீர் கசிவைத் தடுக்க, ஒரு பாதுகாப்பு ஸ்பவுட் கவர் பூட்டுடன் வருகின்றது. மொத்தம் நான்கு வெவ்வேறு அம்சங்கள் கொண்ட மாடல்களை ஆப்பிள் விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது. இதற்கு 100 நாள் உத்தரவாதத்தையும் நிறுவனம் வழங்குகிறது.

கழிப்பறையை விட போனில் அதிகளவு கிருமிகள் – இன்பினிக்ஸ் Smart 6 அளித்த தீர்வு!

ஆப்பிள் ஸ்மார்ட் வாட்டர் பாட்டில் வகைகள் மற்றும் விலை

ஸ்மார்ட் வாட்டர் பாட்டில்கள் நான்கு வெவ்வேறு வகைகளில் கிடைக்கின்றன. அதில்
Hidrate Spark
3 ஸ்மார்ட் வாட்டர் பாட்டில் இந்திய மதிப்பில் சுமார் ரூ.4,600 ($59.95 டாலர்) ஆகவும், HidrateSpark PRO ஸ்மார்ட் வாட்டர் பாட்டில் (Tritan Plastic Sea Glass) இந்திய மதிப்பில் சுமார் ரூ.4,600 ($59.95 டாலர்) ஆகவும், போனஸ் ஸ்ட்ரா மூடியுடன் வரும் HidrateSpark1 (620 மில்லி) இந்திய மதிப்பில் சுமார் ரூ.5,400 ($69.95 டாலர்) ஆகவும், HidrateSpark PRO STEEL ஸ்மார்ட் வாட்டர் பாட்டில் இந்திய மதிப்பில் சுமார் ரூ.6,125 ($79.95 டாலர்) ஆகவும் சந்தையில் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஹைட்ரேட் ஸ்பார்க் 3 வெள்ளை, கருப்பு, மஞ்சள் ஆகிய மூன்று வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. HidrateSpark STEEL, PRO STEEL வகைகளும் வெள்ளி, கருப்பு ஆகிய இரு நிறங்களில் பட்டியலிடப்பட்டுள்ளது. HidrateSpark PRO மாடலானது கருப்பு நிறத்தில் புதிய மிளிரும் தோற்றத்துடன் இருக்கிறது.

இந்த ஸ்மார்ட் பாட்டிலானது iOS 12.3, Watch OS 4.3 ஆகியவற்றைக் கொண்ட ஐபோன்கள் மற்றும் ஆப்பிள் வாட்ச்கள் உடன் இணக்கமாக இருக்கும். HidrateSpark STEEL, PRO மற்றும் PRO STEEL ஆகியவை வேகமாக சார்ஜிங் செய்யும் அம்சத்துடன் ரீசார்ஜபிள் பேட்டரியைக் கொண்டுள்ளது.

ஆப்பிள் வாட்ச் விவரங்கள்முழு அம்சங்கள்சிறப்புகள்Call Function, Fitness Trackingடிஸைன்Rectangular Dial Designடிஸ்பிளே1.5 Inch (3.81 cm) Displayமுழு அம்சங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.