01.05.22 ஞாயிற்றுக்கிழமை – Today Rasi Palan | Daily Rasi Palan | Indraya Rasi Palan| இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். இந்த வார ராசிபலன் : https://youtu.be/Jxoon8CISOw #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link

தருமபுரி அருகே தடை செய்யப்பட்ட மருந்துகளை போதை ஊசியாக விற்பனை செய்த இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தருமபுரி அருகே போதை ஊசிகளை பதுக்கி விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. அதியமான் கோட்டை பகுதியில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனையில், மிட்டாதின்னஹள்ளி பகுதியை சேர்ந்த வஜ்ரவேல் என்பவனும் சாமி செட்டிபட்டியை சேர்ந்த முருகேஷ் என்பவனும் தடை செய்யப்பட்ட மருந்துகளை போதை ஊசியாக போட்டு வந்தது தெரியவந்தது. மருந்துகள் அனைத்தையும் ஓரிடத்தில் பதுக்கி வைத்து பல்வேறு இடங்களில் இளைஞர்களுக்கு விற்பனை செய்து போதைக்கு அடிமையாக்கியதும் அம்பலமானது. இதனையடுத்து இருவரையும் … Read more

புதுச்சேரியில் தொழில் தொடங்க முன்வருவோருக்கு மானியம்: முதல்வர் ரங்கசாமி உறுதி

புதுச்சேரி: “தொழில்முனைவேருக்கு உறுதுணையாக அரசு இருக்கும், தொழில் தொடங்குவோருக்கு விரைவாக உரிமம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும்“ என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) தென்மண்டல கவுன்சில் கூட்டம் புதுச்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று (ஏப்.30) நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிஐஐ தென்மண்டல தலைவர் சுசித்ரா எலா, துணை தலைவர் கமல் பாலி, புதுச்சேரி தலைவர் சுரேந்தர், துணை தலைவர் ஜோசப் ரோசரியோ, தென் மண்டல இயக்குநர் ஜெயேஷ் மற்றும் 6 … Read more

இலங்கை்கு உதவுவதற்கு சமூக ஸ்திரத்தன்மையை வலியுறுத்தியுள்ள IMF!

சர்வதேச நாணய நிதியம் (IMF) பொருளாதார பிரச்சினைகளை திறம்பட நிர்வகிக்க இலங்கைக்கு உதவும் வகையில் சமூக ஸ்திரத்தன்மை பேணப்பட வேண்டுமென விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நிதி அமைச்சு இதனை கூறியுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாடும் மக்களும் எதிர்நோக்கும் பொருளாதார பிரச்சினைகளை திறம்பட நிர்வகிப்பதற்கு இலங்கைக்கு உதவுவதற்காக, நாட்டில் சமூக ஸ்திரத்தன்மை மற்றும் ஜனநாயக நிறுவனங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச நிதி நிறுவனங்கள் (IFI) வலியுறுத்தியுள்ளதாக … Read more

பலாத்காரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பு: அதிர்ச்சியை ஏற்படுத்திய பெண் நாடாளுமன்ற உறுப்பினர்

அமெரிக்க நாடாளுமன்ற பெண் உறுப்பினர் ஒருவர் கருக்கலைப்பு தடைக்கு வாதிட்டு வந்த நிலையில் பலாத்காரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பாக அமையும் என தெரிவித்த கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓஹியோ நாடாளுமன்ற பெண் உறுப்பினர் ஜீன் ஷ்மிட் என்பவரே இள வயதில் பலாத்காரத்திற்கு இலக்காகும் பெண்கள் நல்ல தாயாக மாற அது ஒரு வாய்ப்பு என குறிப்பிட்டுள்ளார். 70 வயதான ஜீன் ஷ்மிட்டின் இந்த கருத்து கடும் விமர்சனத்தை எதிர்கொள்ள வைத்தது. மட்டுமின்றி சமூக ஊடகங்களில் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். … Read more

விராட் கோலி, படிதார் அரைசதம் – குஜராத் வெற்றிபெற 171 ரன்களை நிர்ணயித்தது பெங்களூரு

மும்பை: 15-வது ஐ.பி.எல் தொடரில் இன்று மதியம் 3.30 மணிக்கு மும்பையில் நடைபெறும் 43-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.  அதன்படி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு  அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி, டூ பிளசிஸ் களமிறங்கினர். டூ பிளசிஸ் டக் அவுட்டானார்.  அடுத்து இறங்கிய ரஜத் படிதார் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அரை சதமடித்து … Read more

வாட்டி வதைக்கும் வெயில்- தெலுங்கானா மாநிலத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை

டெல்லி, ஹரியானா, பஞ்சாப்,  பீகார், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் உள்பட வட மாநிலங்களில் கோடை வெயில் வாட்டி வருகிறது.  ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் நேற்று சனிக்கிழமை இயல்பை விட பலமடங்கு அதிகபட்ச வெப்பம் நிலவியது. குருகிராமில் 46.2 டிகிரி செல்சியல் வெப்பம் பதிவானது. நர்னாலில் 45.2 டிகிரியும், ஹிசார் மற்றும் பிவானியில் அதிகபட்ச வெப்பநிலை 45.4 மற்றும் 44.5 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத … Read more

பாக்.கில் மருத்துவம் படித்தால் இந்தியாவில் வேலை இல்லை: தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:மருத்துவ படிப்புக்காக பாகிஸ்தானுக்கு இந்திய மாணவர்கள் செல்ல வேண்டாம். பாகிஸ்தானின் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் அல்லது அதற்கு இணையான மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் எந்தவொரு இந்திய நாட்டினரும், வெளிநாட்டு குடிமகனும், கல்வித் தகுதிகளின் அடிப்படையில் (எந்தவொரு வகையிலும்) வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளுக்கான தேர்வு (எப்எம்ஜிஇ), தேசிய தகுதி தேர்வில் (நெக்ஸ்ட்) பங்கேற்க அல்லது இந்தியாவில் வேலை தேடவோ தகுதி பெற மாட்டார்கள். டிசம்பர் 2018க்கு முன் … Read more

நடத்துனர் இல்லாமல் பயணியர் பஸ் சேவை.| Dinamalar

பாலக்காடு : கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் வடக்கஞ்சேரியில் நடத்துனர் இல்லாமல் பயணியர் பஸ் சேவையை தாமஸ் என்பவர் துவக்கியுள்ளார். இந்த பஸ்சில் ஓட்டுனர் மட்டும் இருப்பார். 45 இருக்கை கொண்ட இந்த பஸ்சில் டிக்கெட் எடுக்க வேண்டிய தேவையில்லை. பஸ்சில் வைக்கப்பட்டுள்ள மூன்று பக்கெட்டில் குறிப்பிட்ட கட்டணம் போட்டால் போதும்; பணம் இல்லாமலும் பயணம் செய்யலாம். அடுத்த முறை இந்த பஸ்சில் பயணம் செய்யும் போது பணத்தை போட்டால் போதும். ஒவ்வொரு பஸ் நிறுத்தம் வரும்போது, … Read more

ஜிம் ஷூட்டில் ரேஷ்மா பசுபலேட்டி

நடிகை ரேஷ்மா பசுபலேட்டி தற்போது சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வளர்ந்துவிட்டார். சினிமாவில் இவர் நடித்த புஷ்பா என்கிற கவர்ச்சி கதாபாத்திரம் அதிக அளவில் பேசப்பட்டது. எனினும் அவருக்கு சின்னத்திரை தான் பட்டுக்கம்பளம் விரித்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டும் ரேஷ்மாவும் அசத்தி வருகிறார். இதற்கிடையில் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அவர் அடிக்கடி பிட்னஸ் மற்றும் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் ஜிம் ஷூட்டில் மேக்கப் இன்றி ஹாட்டான புகைப்படங்களை தற்போது பகிர்ந்துள்ளார். அதை பார்த்துவிட்டு … Read more