திருப்பதியில் ஒரே நாளில் 61 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம்

திருமலை: திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் கொரோனா பரவல் நேரத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வுக்கு பின்னர் கூடுதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. இதனால் திருப்பதி செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 61 ஆயிரத்து 224 பக்தர்கள் திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.  33 ஆயிரத்து 930 பக்தர்கள் தலைமுடி … Read more

பாகிஸ்தானில் சட்டத்தின்படி ஆட்சி நடைபெறுவதை ஆதரிக்கிறோம்- அமெரிக்கா விளக்கம்

வாஷிங்டன்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மீது அந்நாட்டு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. இதையடுத்து பாகிஸ்தான் மக்களிடையே உரையாற்றிய இம்ரான் கான்,  தம்மை பதவியில் இருந்து நீக்க அமெரிக்கா சதி செய்வதாக குற்றம் சாட்டியிருந்தார்.  இந்நிலையில், வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ், பாகிஸ்தானில் அரசியலமைப்பு செயல்முறைபடி ஆட்சி நடைபெறுவதை அமெரிக்கா ஆதரிக்கிறது என்றார்.  பாகிஸ்தானில் தற்போதைய நிலைமையை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். நாங்கள் பாகிஸ்தானின் அரசியலமைப்பு … Read more

நீதிமன்ற உத்தரவுகளை உடனே தெரிந்து கொள்ள புது சாப்ட்வேர்: உச்ச நீதிமன்றத்தில் அறிமுகம்

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை கீழமை நீதிமன்றங்கள் உடனடியாக தெரிந்து கொள்ள வசதியாக புதிய சாப்ட்வேர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குற்ற வழக்கில் சிக்கிய குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியும்,  அதற்கான உத்தரவுகள் கிடைக்காததால் அவர்களை விடுவிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இது தொடர்பான வழக்கை தாமாக முன்வந்து ஏற்று கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ‘இந்த நவீன தொழில்நுட்ப காலத்தில் நீதிமன்ற உத்தரவுக்காக புறாவை எதிர்நோக்கி வானை பார்க்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலையை … Read more

திமுக எம்.பி ஆண்டிமுத்து ராசா அன்று அப்படி பேசினாரே., இன்று என்ன சொல்ல போகிறார்? – எடப்பாடி கே பழனிசாமி கேள்வி.!

டெல்லி பயணத்தின் மர்மத்தை முதல்வர் ஸ்டாலின் விளக்குவாரா? என்று, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் துபாய்க்கு சுற்றுலா மேற்கொண்டார். கடந்த எட்டு மாதமாக துபாயில் நடைபெற்று வந்த கண்காட்சி முடிய 6 நாட்களே இருந்த நிலையில், தமிழக மக்களின் வரிப் பணத்தில் பெருஞ்செலவில் அமைக்கப்பட்ட தமிழக அரங்கை மார்ச் 24 … Read more