ரஷ்யா உக்ரைன் போரில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து தனது ஐரோப்பிய பயணத்தின் போது பிரதமர் விவரிப்பார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய நாடுகளுடனான உறவை மேம்படுத்துவதே பிரதமர் மோடியின் பயணத்தின் முக்கிய நோக்கமாகும் என வெளியுறவுத்துறைச் செயலர் வினய் மோகன் குவாத்ரா தெரிவித்துள்ளார். இந்தப் பயணத்தின் போது ரஷ்யா உக்ரைன் போரில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து பிரதமர் விவரிப்பார் என்றும் கூறினார்.
முன்னதாக தனது பயணம் குறித்த அறிக்கையை வெளியிட்ட பிரதமர், சவால் மிகுந்த ஒரு சூழலில் தனது ஐரோப்பிய பயணம் அமைந்துள்ளதாகவும், அந்நாடுகளுடன் ஒத்துழைப்பை பெருக்க வேண்டும் என விரும்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார். பிரதமர் இப்பயணத்தில் ஜெர்மனி பிரதமர் ஓலஃப் ஷோல்ஸ், டென்மார்க் பிரதமர் மெட் ஃபிரெட்ரிக்சன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆகியோரை சந்திக்க உள்ளார். இது தவிர இந்தோ நார்டிக் நாடுகள் உச்சி மாநாட்டிலும் பிரதமர் பங்கேற்க உள்ளார் என குவாத்ரா தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டில் பிரதமர் மோடியின் முதல் வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ரஷ்யாவை இந்தியா நம்பியிருப்பதை நாங்கள் விரும்பவில்லை: அமெரிக்கா
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM