
டூ பீஸ் புகைப்படங்கள்: மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் ஹன்சிகா!
ஹன்சிகா நடித்துள்ள 50வது படமான மஹா ஏப்ரல் 28ம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் மீண்டும் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ரவுடி பேபி மற்றும் ஆர்.கண்ணன், விஜய் சந்தர் இயக்கும் படங்களிலும் நடித்து வருகிறார். அதோடு எம் ஒய்-3 என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார் ஹன்சிகா. இந்நிலையில் தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள ஹன்சிகா அங்கு தான் டூ பீஸ் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு 2 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் குவிந்து வருகிறது.