கடலூரில் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு அட்டை பெற, நோயாளியை ஸ்டெச்சரில் வைத்து ஆம்புலன்ஸ் மூலம் ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது.
கே.என்.பேட்டையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மூதாட்டியான பேபி, சில நாட்களுக்கு முன் வீட்டில் தவறி விழுந்து இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. கடலூர் அரசு மருத்துவமனையில் படுத்த படுக்கையாக மூதாட்டி சிகிச்சை பெற்று வந்த நிலையில், அறுவை சிகிச்சை மேற்கொள்ள அவர்களது உறவினர்கள் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு அட்டைக்கு விண்ணப்பித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட நபரை நேரில் பார்த்தால் தான் காப்பீடு அட்டை தர முடியும் என அதிகாரிகள் கூறவே, மூதாட்டியை ஸ்டெச்சரில் வைத்து ஆம்புலன்ஸ் மூலம் உறவினர்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.