2 லாரி வெடிபொருட்கள் மிசோரமில் பறிமுதல்| Dinamalar

அய்சால் : வடகிழக்கு மாநிலமான மிசோரமில், இரண்டு லாரிகளில் கடத்தி செல்லப்பட்ட ஆயுதங்கள், வெடி பொருட்களை, அசாம் ரைபிள்ஸ் படை யினர் நேற்று முன்தினம் பறிமுதல் செய்தனர்.

மிசோரமில், முதல்வர் ஸோரம்தங்கா தலைமையில் மிசோ தேசிய முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, அய்சால் மாவட்டத்தில் ஆயுதங்கள் கடத்தப்படுவதாக அசாம் ரைபிள்ஸ் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நடந்த தீவிர சோதனையில், கேல்சிஷ் பகுதியில் வந்த இரண்டு லாரிகளை போலீசார் மடக்கினர். அதில் இருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள், மூவாயிரம் கிலோ எடையிலான, 24 ஆயிரம், ‘ஜெலட்டின்’ குச்சிகள், 100 கிலோ வெடி மருந்து உட்பட பல்வேறு பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

லாரியில் இருந்த நால்வரை போலீசார் கைது செய்தனர். இந்த ஆயுதங்கள், அண்டை நாடான மியான்மரில் இருந்து கடத்தி வரப்பட்டு இருக்கலாம் என, உளவுத்துறையினர் சந்தேகம் தெரிவித்தனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.