கொழும்பு:இலங்கயில் நேற்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.நம் அண்டை நாடான இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.
இதையடுத்து, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்தா ராஜபக்சே இருவரும் பதவி விலகக் கோரி, பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், ராஜபக்சே சகோதரர்கள் பதவி விலக மறுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, ஏராளமான மாணவர்கள், தொழிற்சங்கத்தினர் பார்லி.,யை முற்றுகையிட்டு அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்திற்கு பொதுமக்களும் குடும்பம் குடும்பமாக வந்து ஆதரவு தெரிவித்தனர்.
திடீரென ஆயிரக்கணக்கானோர் பார்லி., வளாகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.நிலைமை தீவிரமடைந்து வருவதையடுத்து, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, சட்டம்,ஒழுங்கை நிலைநாட்ட வேண்டி, நேற்று நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகடனத்தை அறிவித்தார்.பொருளாதார நெருக்கடி அதிகரித்ததையடுத்து, கடந்த மாதம் ௧ம் தேதி முதல் ௫ம் தேதி வரை இலங்கையில் நஅவசர நிலை அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Advertisement