
சூரியின் அன்னையர் தின வாழ்த்து
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து ‛விடுதலை' படத்தின் மூலம் கதாநாயகனாக உயர்ந்துள்ளார் நடிகர் சூரி. அன்னையர் தினமான இன்று, தனது தாயின் படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த சூரி, அன்னையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர், ‛ஆறு புள்ள பெத்து ஆறு பொறப்பு எடுத்து இந்த நொடி வரைக்கும் எங்களுக்காகவே வாழும் எங்க ஆத்தா மு.சேங்கை அரசி; இன்னும் எத்தனை பொறப்பு எடுத்தாலும் உன் மக்களாவே நாங்க பொறக்கணும். அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்' எனப் பதிவிட்டுள்ளார்.