திருவனந்தபுரம்:
திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் பிஜு. இவர் அந்த பகுதியில் உள்ள கல்லறையில் ரூ.200க்கு குதிரை கானாங்கெளுத்தி மீன் வாங்கி உள்ளார். அதனை குழம்பு வைத்து குடும்பத்தினர் சாப்பிட்டனர்.
இந்தநிலையில் அவர்களுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. முதலில் பிஜூவின் மகளுக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இரவில் பிஜூவின் மனைவிக்கும் வயிற்று வலி ஏற்பட்டது.
இந்த சூழலில் பிஜூ மற்றும் அவரது 2வது மகள் ஆகியோரும் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து 4 பேரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர்.
எனவே அவர்கள் சாப்பிட்ட உணவில் விஷத்தன்மை கலந்திருக்கலாம் என்று டாக்டர்கள் கருதினர். இந்த நிலையில் பிஜு மீன் வாங்கிய கடையில் மறுநாள் மற்றொருவர் மீன் வாங்கிய போது மீனில் இருந்து புழுக்கள் வந்துள்ளன.
எனவே பிஜு வாங்கிய மீன் சுகாதாரமற்றதாக இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. வெஞ்சா ரம்மூடு போலீசார் மற்றும் கல்லறை கிராம அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மீன் மாதிரிகளை சேகரித்தனர். ஏற்கனவே ஷவர்மா சிக்கன் உணவு பிரச்சினை இருக்கும் நிலையில் தற்போது மீன் உணவு சாப்பிட்டவர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.