விடியல் ஆட்சியிலும்…., தமிழக அரசே?…, கடைசியில் அட்டகத்தி பா ரஞ்சித்தும் சுமைலி போட்டு தோழமை சுட்டல்.!

சென்னை ஆர் ஏ புரம் கோவிந்தசாமி நகரில் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, முதியவர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பலத்த தீக்காயங்களுடன் அவர் மீட்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

60 வயதான கண்ணையா என்ற நபர், அவரது வீட்டை அகற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். தீ அவர் உடல் முழுவதும் பரவியதால், சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் உடனடியாக தீயை அணைத்து, அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

முதியவர் தீக்குளித்த காரணத்தால் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள், போலீசார் வாகனம் மற்றும் அரசு அதிகாரிகளின் வாகனங்கள் மீது கல்லெறிந்து தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், அட்டகத்தி பட இயக்குனர் பா ரஞ்சித் தந்து டிவிட்டர் பக்கத்தில், 
“விடியல் ஆட்சியிலும் 😊தொடரும் சென்னை பூர்வகுடிகள் மீதான அடக்குமுறை! 
நீதி மன்ற உத்தரவு இம்மக்களுக்கு மட்டும் தானா?? 
மாற்று திட்டம் என்பது சென்னையை விட்டு வெளியேற்றுவது மட்டும் தானா? 
இம்மக்களின் உரிமையை, உணர்வை, கோரிக்கையை எப்போது யோசிக்க, மதிக்க தொடங்குவீர்கள் தமிழக அரசே?” என்று தோழமை சுட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.