
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்றைக்கு உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிற நடிகர். கண்டக்டர் பணியில் வாழ்க்கையை ஆரம்பித்து சூப்பர்ஸ்டார் வரை உயர்ந்த பயணத்தை இங்கு பார்ப்போம்.

மராத்தி குடும்பத்தில் பிறந்த ரஜினியின் இயற்பெயர் சிவாஜி ராவ் கைக்வாட். மாவீரர் சிவாஜியின் நினைவாக இந்த பெயர் அவருக்கு சூட்டப்பட்டது.

ராமோஜி ராவ்க்கும், ராமாபாய்க்கும் நான்காவது மகனான ரஜினி பெங்களூரில் இருக்கும் ஆச்சாரியா பாடசாலை, விவேகானந்த பாலக சங்கம் ஆகியவற்றில் கல்வி பயின்றார்.

படிப்பில் பெரிதாக கவனமில்லை. படிப்பிற்கு பிறகு அங்கேயே நடத்துனராக பணியாற்றினார். நடிகராக விரும்பி சென்னைக்கு வந்தார் ரஜினி.

சென்னை திரைப்படக்கல்லூரியில் நண்பரின் உதவியோடு படிக்கிறார். 1975-ல் கதா சங்கமா என்கிற கன்னட படத்தில் நடித்தார்.

ரஜினியை தமிழில் அறிமுகப்படுத்தியது கே.பாலச்சந்தர் தான். ரஜினியே இதனை பல மேடைகளில் குறிப்பிட்டிருப்பார். பாலசந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தில் சிறிய வேடத்தில் அறிமுகமாகிறார்.

மூன்று முடிச்சு, புவனா ஒரு கேள்விக்குறி, அவர்கள், 16 வயதினிலே, காயத்ரி போன்ற படங்களில் ரஜினிக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

கதாநாயகனாக நடித்த முதல் படம் பைரவி. முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபதுவரை, எங்கேயோ கேட்ட குரல் உள்ளிட்ட படங்கள் வெளியாகின்றன.

கே.பாலச்சந்தர் சொன்னதன் பெயரில் தமிழ் கற்றுக்கொள்கிறார் ரஜினி. ‘உங்களை எங்கேயோ கொண்டுபோய் விடுவேன்’ என பாலச்சந்தர் சொன்னது அப்படியே நடக்கவும் செய்தது.

பில்லா, தனிக்காட்டுராஜா, போக்கிரி ராஜா, முரட்டுக்காளை படங்களில் ஆக்ஷன் ஹீரோவாகவும் தில்லுமுல்லு, போன்ற படங்கள் நகைச்சுவை ஹீரோவாகவும் மக்கள் மனங்களில் இடம்பிடித்தார்.

சமீபத்தில் வெளியான காலா, கபாலி, பேட்டை, தர்பார், அண்ணாத்த படங்களின் வழியே இன்றைய ரசிகர்களையும் அவர் ஈர்க்கத் தவறவில்லை.

ஜப்பானில் மொழிபெயர்க்கப்பட்டு கட்டுக்கடங்காத தமிழ் நடிகரின் படம், ரஜினியின் படமாக மட்டும் தான் இருக்கும். ரஜினி 169-க்கு ரசிகர்கள் மரண வெயிட்டிங்.

எளிய நடத்துனர் பணியில் ஆரம்பித்த சிவாஜியின் வாழ்க்கை உலகமே கொண்டாடும் ரஜினிகாந்தின் வாழ்க்கையாக மாறியதின் பின்னணியில் இருக்கிற மந்திரம் ‘உழைப்பு’ தான்.