அக்காள் மகன் சரியாக படிக்காத இதை தட்டிக்கேட்ட தாய்மாமன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது அக்காள் மகன் அங்குள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அவர் அந்த பகுதியில் உள்ள இளைஞர்களுடன் நட்பாக பழகி வந்தார். மேலும், அவர்களோடு சேர்ந்து கொண்டு பள்ளிக்கு சரிவர செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த பிரபாகரன் அக்காள் மகனான அகிலனின் நண்பர் சுரேந்தர் இடம் இது பற்றி விசாரித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றவே இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனை அடுத்து அங்கு வந்த சுரேந்தர் நண்பர்கள் அறிவாளர் பிரபாகரனை சரமாரியாக தாக்கினர்.
இதனால், அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பிரபாகரன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.