இந்தியர்களுக்கு மண்ணுக்கும் பொன்னுக்கும் மீதான ஆசை எப்போதும் குறைவது இல்லை, பிட்காயின், NFT என எவ்வளவு புதிய முதலீடுகள் வந்தாலும் புதிய வீட்டை வாங்கப்படும் எண்ணிக்கையும் சரி, தங்கம் வாங்கும் அளவீடும் சரி இந்தியாவில் குறைவது இல்லை.
இது சாமானியர்களுக்கு மட்டும் அல்லா பல முன்னணி நிறுவனத் தலைவர்கள், டெக் நிறுவன ஸ்டார்ட்அப் முதலாளிகள் என அனைவருக்கும் பொருந்தும் என்பதைச் சமீபத்தில் ஆடம்பர ரியல் எஸ்டேட் விற்பனை குறித்த தரவுகள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
முகேஷ் அம்பானியும் சந்திரசேகரனும் இனி பக்கத்து வீட்டுக்காரர்கள்! புதிய வீட்டின் விலை என்ன தெரியுமா?!

இந்திய பணக்காரர்கள்
இந்திய பணக்காரர்கள் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட காலத்தில் இருந்து ஆடம்பர சொத்துக்களில் அதிகளவில் முதலீடு செய்து வருகிறார்கள். இதில் குறிப்பாக வர்த்தகக் குடும்பங்கள், ஸ்டார்ட்அப் நிறுவனர்கள் மற்றும் முன்னணி சிஇஓக்கள் போன்றோர் கடந்த சில மாதங்களாக 50 கோடி ரூபாய் முதல் 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடம்பர வீட்டை வாங்கியுள்ளனர்.

மும்பை மற்றும் புனே
மும்பை மற்றும் புனேவில் ஆடம்பர வீடுகள் விற்பனை 2021 இல் நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டு உள்ளது. இதன் மூலம் 2022 இல் புதிய வரலாற்றுச் சாதனை கூடப் பதிவு செய்யும் நிலை தற்போது உள்ளது.

20,255 கோடி ரூபாய்
சோத்பி இண்டர்நேஷ்னல் ரியாலிட்டி நிறுவனத்தின் இந்திய கிளை மற்றும் CRE Matrix நிறுவனம் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் 2021ல் மும்பையில் மட்டும் சுமார் 20,255 கோடி ரூபாய் மதிப்புள்ள 1,214 ஆடம்பர வீடுகள் விற்கப்பட்டுள்ளன. இது 2018ல் 598 வீடுகளாகவும் இதன் மதிப்பு 9872 கோடி ரூபாயாகவும் உள்ளது.
அப்படி யார் யார் ஆடம்பர வீட்டை வாங்கியுள்ளார்கள் தெரியுமா..?

முக்கியத் தலைகள் பார்ட் 1
சேகர் பஜாஜ், பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தின் ப்ரோமோட்டர் தலைவர்; பார்தி எண்டர்பிரைசஸ் துணைத் தலைவர் ராஜன் பார்தி மிட்டல்; ஐநாக்ஸின் சித்தார்த் ஜெயின்; வீடியோகான் குழுமத்தின் அனிருத் தூத்தின் மனைவி பூஜா தூத்; ஷைலேஷ் டால்மியா மற்றும் அவரது மனைவி நடாஷா; சித்தார்த் ஷா – பார்ம் ஈஸி நிறுவனர்

முக்கியத் தலைகள் பார்ட் 2
கோடீஸ்வர பங்குசந்தை முதலீட்டாளர் மற்றும் சில்லறை வர்த்தக அதிபர் ராதாகிஷன் தமானி; எச்டிஎஃப்சி வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஆதித்யா பூரியின் மனைவி அனிதா பூரி மற்றும் மகள் அம்ரிதா பூரி; KEI இண்டஸ்ட்ரீஸ் ப்ரோமோட்டர் அனில் குப்தா; டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் மற்றும் அவரது குடும்பத்தினர்; மற்றும் ஆகாஷ் எடுகேஷனல் சர்வீசஸ் நிறுவனர் ஜே.சி.சௌத்ரி.

முக்கியப் பகுதிகள்
2021 மற்றும் 2022ல் விற்பனை செய்யப்பட்ட பெரும்பாலான ஆடம்பர வீடுகள் மும்பை, கோவா, அலிபாக் மற்றும் டெல்லி-யின் முக்கியமான பகுதிகளான ஜோர் பாக், சுந்தர் நகர் மற்றும் கோல்ஃப் லிங்க்ஸ் போன்ற இடத்தில் அமைந்துள்ளன.
India’s ultra-rich businessmen buying luxury properties in Mumbai, pune, Delhi
India’s ultra-rich businessman buying luxury properties in Mumbai, pune, Delhi தேடி தேடி ஆடம்பர வீட்டை வாங்கும் இந்திய தொழிலதிபர்கள்.. ஒரு வீடு ரூ.1000 கோடியாம்..!