நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் சிக்கியவர்களை மீட்கும் பணி 2ஆவது நாளாக தொடரும் நிலையில், தேசிய பேரிடர் மீட்பு படையினர் இரு குழுவாக பிரிந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரியில் நேற்று, ராட்சதப் பாறை சரிந்து விழுந்ததில் கற்கள் அள்ளும் பணியில் ஈடுபட்ட ஒருவர் உயிரிழந்த நிலையில், 2 பேர் மீட்கப்பட்டனர்.
மேலும் 3 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதால், அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சம்பவ இடத்தில் வருவாய்த்துறை செயலாளர் குமார்ஜெயந்த், தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர்.
இதனை அடுத்து பேட்டியளித்த அஸ்ரா கார்க், சம்பவம் தொடர்பாக விசாரணை அதிகாரியாக நாங்குனேரி உதவி காவல் கண்காணிப்பாளர் ராஜா சதுர்வேதி நியமிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.