
மகாபலிபுரத்துக்கு சுற்றுலா சென்ற நயன்தாரா- விக்னேஷ் சிவன்
கடந்த 6 ஆண்டுகளாக காதல் ஜோடிகளாக வலம் வருகின்றனர் நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடி. இருவரும் ஜூன் 9-ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர்கள் இருவரது குடும்பத்தினர் திருமணத்திற்கான வேலைகளை தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் சமீபகாலமாக நயன்தாரா -விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் பல பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பி அவர்கள் அதையடுத்து மகாபலிபுரத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார்கள். அங்குள்ள சிறப்புமிக்க சிற்பக் கலைகளை கண்டுகளித்த அவர்கள் அதன்பிறகு அங்குள்ள ரெஸ்டாரண்டில் பிரியாணி சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து திரும்பி இருக்கிறார்கள்.