கணவரை கொன்றுவிட்டு.. உக்ரேனிய விதவை பெண்ணிடம் மன்னிப்பு கேட்ட ரஷ்ய வீரர்!


கணவரை சுட்டுக் கொன்றதற்காக உக்ரேனிய விதவை பெண்ணிடம் ரஷ்ய வீரர் மன்னிப்பு கோரியுள்ளார்.

உக்ரைன் போரின் போது அவரின் நடவடிக்கைகள் குறித்த போர் குற்றங்கள் தொடர்பான விசாரணையை ரஷ்ய ராணுவ வீரர் Vadim Shishimarin (21) எதிர்கொண்டு வருகிறார்.

வடகிழக்கு சுமி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் திறந்த கார் கண்ணாடி வழியாக 62 வயது Oleksandr Shelipov என்ற நபரை, Vadim Shishimarin தலையில் சுட்டுக் கொன்றார்.

இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் Vadim Shishimarin-க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.

இன்று கீவ் நீதிமன்றத்தில் ஆஜரான Shishimarin, அதிகாரிகளின் உத்தரவின் பெயரில் தான் உக்ரேனியரை சுட்டதாக கூறினார்.

போனில் பேசிக்கொண்டிருக்கும் நபர், உக்ரேனிய படைகளுக்கு தங்கள் இருப்பிடம் குறித்த தகவலை பகிரக்கூடும், எனவே அந்த நபரை சுட்டுக்கொல்லும் படி அதிகாரி எனக்கு உத்தரவிட்டார்.

அதிகாரியின் உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டிய நிலையில் நான் இருந்தேன் என கூறினார்.

கணவரை கொன்றுவிட்டு.. உக்ரேனிய விதவை பெண்ணிடம் மன்னிப்பு கேட்ட ரஷ்ய வீரர்!Vadim Shishimarin

மேலும், தான் செய்ததை மன்னிக்கும்படி, நீதிமன்றத்தில் இருந்த கொல்லப்பட்டவரின் மனைவி Kateryna Shelipova-யிடம் Shishimarin மன்னிப்பு கோரினார்.

எனது கணவர், வீட்டிற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டதை நான் பார்த்தேன் என கூறிய  Kateryna Shelipova, Shishimarin-க்கு ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

கணவரை கொன்றுவிட்டு.. உக்ரேனிய விதவை பெண்ணிடம் மன்னிப்பு கேட்ட ரஷ்ய வீரர்!Kateryna Shelipova

உக்ரைன் மீதான போருக்கு ரஷ்யாவுக்கு பதிலடி! பிரித்தானியா முக்கிய அறிவிப்பு 

ஆனால், Shishimarin-ஐ ரஷ்யாவிடம் ஒப்படைத்துவிட்டு, அவருக்கு பதிலாக மரியுபோலில் உள்ள உக்ரேனிய வீரர்கள் மீட்கப்பட்டால், நான் கவலைப்பட மாட்டேன் என்று Kateryna Shelipova கூறினார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.