மும்பை,
விராட் கோலி தலைமையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் மகத்தான சாதனை படைத்து இருந்தது. தற்போது இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா உள்ளார். இந்த நிலையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் எதிர்காலம் குறித்து முன்னாள் இந்திய வீரர் விரேந்தர் சேவாக் பேசியுள்ளார். அப்போது சேவாக் இரண்டு இளம் இந்திய வீரர்களை பாராட்டினார்
பிரித்வி ஷா மற்றும் ரிஷப் குறித்து சேவாக் கூறுகையில், ” அவர்கள் இருவரும் விளையாடினால் எதிரணி 400 ரன்கள் எடுத்தால் கூட அந்த இலக்கு போதுமா என யோசிப்பார்கள் . டெஸ்ட் கிரிக்கெட்டை இந்திய அணி ஆளவும் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இந்திய அணி வெல்லவும் அவர்கள் இருவரும் உதவுவார்கள்” என சேவாக் தெரிவித்தார்.
கடந்த முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி வரை முன்னேறிய இந்திய அணி இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியிடம் படுதோல்வி அடைந்தது.