மும்பை : மகளை கொன்ற வழக்கில், உச்ச நீதிமன்றம் ‘ஜாமின்’ வழங்கியதையடுத்து, ஆறு ஆண்டுக்குப்பின், சிறையிலிருந்து இந்திராணி முகர்ஜி விடுவிக்கப்பட்டார்.தனியார் ‘டிவி’ உரிமையாளர் பீட்டர் முகர்ஜியின் இரண்டாவது மனைவியும், ஐ.என்.எக்ஸ்., ‘மீடியா’வின் உரிமையாளருமான இந்திராணி முகர்ஜி, தன் மகள் ஷீனா போராவின் கழுத்தை நெரித்து கொலை செய்த குற்றச்சாட்டில் 2015ல் கைது செய்யப்பட்டார்.
இதற்கு உடந்தையாக இருந்த பீட்டர் முகர்ஜியும் கைது செய்யப்பட்டார். கடந்த 2020ல், பீட்டருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. ஆனால், இந்திராணியின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு வந்த நிலையில், அவருக்கு உச்ச நீதிமன்றம்௧௮ம் தேதி ஜாமின் வழங்கியது.இதையடுத்து, மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்திராணி, ஆறு ஆண்டுக்கு பின் நேற்று விடுவிக்கப்பட்டார்.”சிறையிலிருந்து வெளியே வந்தது மகிழ்ச்சியளிக்கிறது,” என, இந்திராணி கூறினார்.
மும்பை : மகளை கொன்ற வழக்கில், உச்ச நீதிமன்றம் ‘ஜாமின்’ வழங்கியதையடுத்து, ஆறு ஆண்டுக்குப்பின், சிறையிலிருந்து இந்திராணி முகர்ஜி விடுவிக்கப்பட்டார்.தனியார் ‘டிவி’ உரிமையாளர்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.