ஆக்சிஸ் மியூச்சுவல் ஃபண்ட் மோசடி.. முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியது என்ன?

ஆக்சிஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தை சேர்ந்த இரண்டு ஃபண்ட் மேலாளர்கள் ஃபிராண்ட் ரன்னிங் எனும் பண மோசடியில் ஈடுபட்டுள்ளது சமீபத்தில் தெரிய வந்தது.

இது ஃபண்ட் மேலாளர்களின் கட்டுப்பாட்டிற்குள் வரும். அவர்கள் பல துறை சார்ந்த பங்குகளை காண்கானிப்பார்கள். அதற்கென ஒரு ஆராய்ச்சி குழுவும் அவர்கள் கீழ் இருக்கும்.

இந்த குழுவில் உள்ள ஒவ்வொரு நபரும் வங்கித்துறை, மெடிக்கல் துறை, ஐடி துறை என பல துறைகளின் பங்குகளைப் பற்றி ஆராய்ந்து அவற்றில் சிறந்த பங்குகளை ஃபண்ட் மேனேஜரிடம் ஒப்படைப்பார்கள்.

ரூ.1100 கோடிக்கு ஏலம் போன கார்.. என்ன ஸ்பெஷல்!

ஃபண்ட் மேனேஜர்கள்

ஃபண்ட் மேனேஜர்கள்

மேலும் எந்த பங்கினை வாங்க போகிறார்கள், கையிருப்பில் விற்பனை செய்யப் போகிறார்கள் என்பது உள்ளிட்ட விவரங்களையும், எப்போது வாங்க போகிறார்கள், விற்பனை செய்ய போகிறார்கள் என்பது உள்ளிட்டவற்றை ஃபண்ட் மேனேஜர்கள் தான் தீர்மானிப்பார்கள். எனினும் பங்குகளை வாங்குவது மற்றும் விற்பனை செயவது குறித்து யாரிடமும் தகவல்களை பகிரக் கூடாது.

நிறுவனத்திற்கு பிரச்சனை

நிறுவனத்திற்கு பிரச்சனை

அப்படி பகிர்ந்தால் அதனால் அவர்களை சார்ந்தவர்கள் பலனடையக் கூடும். உதாரணத்திற்கு டாடா மோட்டார் பங்கினை குறைந்த விலையில் வாங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது என வைத்துக் கொள்வோம். அதற்கு முன்பாக குறைந்த விலையில் வேறு யாரேனும் குறைந்த விலையில் வாங்கி விடுவார்கள். அதன் பிறகு நிறுவனம் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும். ஆக இதன் மூலம் மற்றவர்கள் லாபம் பார்த்துவிடுவார்கள். இதனால் நிறுவனத்திற்கான வாய்ப்பும் குறைவாகும்.

ஃபிரண்ட் ரன்னிங் என்றால் என்ன?
 

ஃபிரண்ட் ரன்னிங் என்றால் என்ன?

அதனால் அந்தக் குறிப்பிட்ட ஃபண்டில் எதிர்பார்த்ததைவிடக் குறைவான லாபமே கிடைக்கும். இச்செயலுக்குப் பெயர்தான் ஃபிரண்ட் ரன்னிங் எனக் கூறப்படுகிறது.

இந்த மோசடியில் ஆக்சிஸ் மியூச்சுவல் ஃபண்டைச் சேர்ந்த இரண்டு ஃபண்ட் மேலாளர்களான விரோஸ் ஜோஷி (Viresh Joshi) மற்றும் தீபக் அகர்வால் (Deepak Agarwal) இருவரும் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

கமிஷன் வாங்கியிருக்கலாம்

கமிஷன் வாங்கியிருக்கலாம்

அதில் பங்குகளை வாங்கும் மற்றும் விற்கும் விவரங்களைப் பற்றி அவர்கள் தரகு நிறுவனங்களுக்குத் தகவல்களைப் பரிமாறிக் கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு மாறாக அவர்களிடமிருந்து பல கோடிகளில் பணத்தை கமிஷனாக பெற்றிருக்கலாம் என்ற யூகங்கள் இருந்து வருகின்றது.

பணி நீக்கம்

பணி நீக்கம்

ஆக்சிஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் குற்றம் சாட்டப்பட்டு விசாரணையில் இருக்கும் ஃபண்ட் மேனேஜர்களை, கடந்த பிப்ரவரி 2022-ல் தற்காலிக விடுமுறையை ஃபண்ட் நிறுவனம் அளித்திருந்தது. அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதையும், அவர்களின் மோசடி குறித்தும் ஆக்சிஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அஸ்திவாரமே ஆட்டம்

அஸ்திவாரமே ஆட்டம்

இந்த நிலையில் ஆக்சிஸ் ஃபண்ட் நிறுவனமானது 2.5 லட்சம் கோடி ரூபாய் சொத்தினை நிர்வாகம் செய்து வரும் நிலையில், அதன் நிலை குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

இந்தியாவின் 7வது மிகப்பெரிய ஃபண்ட் மேலாளரின் அஸ்திவாரத்தினையே இந்த மோசடிகள் அசைத்து பார்த்துள்ளது. எனினும் இது குறித்து ஆக்சிஸ் மியூச்சுவல் ஃபண்ட் இதுவரையில் முழுமையான பிரச்சனையை அறிவிக்கவில்லை. இது குறித்தான விசாரணை நடந்து கொண்டுள்ளது. அதன் பிறகே முழுமையான விவரமும் தெரியவரும்.

முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்

முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்

 

இதற்கிடையில் சில நிபுணர்கள் நிதி மேலாளர்களின் நீக்கம் என்பது, முதலீட்டாளர்களுக்கு எந்த பிரச்சனையையும் இருக்காது. செபியோ அல்லது ஃபண்ட் ஹவுஸோ முதலீட்டாளர்களுக்கு எந்த வழிகாட்டுதலையும் வழங்கவில்லை என்பதால், அவர்கள் வாங்கிய நிதிகளின் முன்னேற்றங்கள் குறித்து விழிப்புடன் காத்திருந்து இருப்பது நல்லது என கூறுகின்றனர். எனினும் தலீட்டாளர்கள் பீதி அடையாமல் தொடர்ந்து முதலீடு செய்யலாம் என்று மார்னிங் ஸ்டாரின்வெஸ்ட்மெண்ட் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

AXIS mutual fund scam; investors must wait and watch, say experts

AXIS mutual fund scam; investors must wait and watch, say experts/ஆக்சிஸ் மியூச்சுவல் ஃபண்ட் மோசடி.. முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியது என்ன?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.