கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!

கோவையில் நடைபெற்ற திருமண விழாவில் மக்கள் இயக்கத்தினர் மணமக்களளுக்கு தக்காளியை பரிசாக வழங்கினர்.
உணவு சமைப்பதற்கான காய்கறிகளில் மிகவும் முக்கியமானது தக்காளி இந்திய உணவு வகைகள் தென்னிந்திய உணவு வகைகள் மற்றும்ட ரசம், கூட்டு, தக்காளி சாதம் என சமையலில் எங்கு பார்த்தாலும் தக்காளி இல்லையென்றால் சமையலே இல்லை எனும் அளவிற்கு தக்காளி முக்கியத்துவம் உள்ளது.
image
இந்நிலையில், தக்காளியின் விலை தற்போது திடீரென விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து கிலோ 120 வரை விற்பனையாகி வருவதோடு விலை உயர்வால் மக்கள் திணறி வருகின்றனர். இந்நிலையில் கோவையில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் தக்காளியை பரிசாக அளித்து மணமக்களை ஆச்சர்யபட வைத்த நிகழ்வும் அரங்கேறியுள்ளது.
கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்க தெற்கு நகர இளைஞரணி பொருளாளரான அக்கீம் என்பவரின் மகள் அப்சானாவிற்கும், ஹாரீஸ் என்பவருக்கும் திருமண நிகழ்ச்சி கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விஜய் மக்கள் இயக்க இளைஞரணி நிர்வாகிகள் திருமண பரிசாக மணமக்களுக்கு தக்காளியை வழங்கி ஆச்சரியப்படுத்தினர்.
image
இதனை சற்றும் எதிர்பார்க்காத மணமக்களும் அங்கு கூடியிருந்தவர்களும் வியப்படைந்தனர். இந்நிலையில் இதுவரை இல்லாத அளவிற்கு தக்காளியின் விலை உயர்ந்துள்ளதால் மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.