கிணத்துக்கடவு அடுத்த கண்ணப்பன் நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி – கிட்டாணம்மாள் தம்பதி. இவர்களுக்கு 3 மகள்களும் 2 மகன்களும் உள்ளனர்.
பழனிசாமியின் கடைசி மகனான அர்ஜுனன், சிக்கலாம்பாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த அர்ஜுனன் தந்தையிடம் கேம் விளையாட செல்போன் கேட்டுள்ளார். இதற்கு தந்தை பழனிசாமி செல்போனை தர மறுத்துள்ளார்.
இதில் மனமுடைந்த சிறுவன் அர்ஜுனன், வீட்டுக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், சிறுவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.