சென்னை: ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கி வரும் படம் சென்டிமீட்டர். படத்தில் மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் இடம்பெற்ற ‘கிம் கிம் கிம்’ எனும் பாடலை மஞ்சுவாரியர் பாடியுள்ளார். இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சந்தோஷ் சிவன் ஏற்கனவே பல படங்களை இயக்கி உள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் இயக்கி வரும் இந்த படம் தமிழ், மலையாளத்தில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் மஞ்சுவாரியரைத் தவிர நடிகர் யோகி பாபு, காளிதாஸ் ஜெயராம், ஷைலி கிஷன் ஆகியோர் நடித்துள்ளனர்.
