கிங்க்ஸ்டன்: வனவிலங்கு பூங்காவில் பராமரிப்பாளர் கையை சிங்கம் கடித்துக் குதறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
வட அமெரிக்காவில், கரீபியன் கடலில் அமைந்துள்ள தீவு நாடுகளில் ஒன்றான ஜமைக்காவில் உள்ள வனவிலங்கு பூங்காவில், கூண்டுக்குள் இருந்த சிங்கத்தை அதன் பராமரிப்பாளர் சிறு துளை வழியாக சிங்கத்தை தொட்டு சீண்டினார்.
சிறிய துளை என்பதால் சிங்கத்தால் ஒன்றும் செய்ய முடியாது என நினைத்தார். ஆனால், கடும் கோபத்தில் இருந்த சிங்கம் ஒரு கட்டத்தில் பராமரிப்பாளரின் கைவிரல்கள் கவ்வி கடித்தது. அவர் கடுமையாக போராடி தன்னை விடுவித்துக் கொண்டார்.
ஆனால், அவரது விரல்கள் துண்டிக்கப்பட்டன இந்த சம்பவம் நடந்த போது அங்கிருந்த பார்வையாளர்களில் சிலர், ‘மொபைல் போனில்’ இந்தக் காட்சியை ‘வீடியோ’ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். அது வேகமாக பரவி வருகிறது.
கிங்க்ஸ்டன்: வனவிலங்கு பூங்காவில் பராமரிப்பாளர் கையை சிங்கம் கடித்துக் குதறியது பரபரப்பை ஏற்படுத்தியது. வட அமெரிக்காவில், கரீபியன் கடலில் அமைந்துள்ள தீவு நாடுகளில் ஒன்றான
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.