இந்தியாவின் முன்னணி வர்த்தக குழுமமான அதானி குழும பங்குகள், இன்று பலத்த சரிவினைக் கண்டு வருகின்றன. ஏன் இந்த சரிவு?
கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? இந்த நிலையில் அதானி குழும பங்குகளை வாங்கலாமா? அடுத்து என்ன செய்யலாம்? நிபுணர்களின் கருத்து என்ன?
குறிப்பாக அதானி எண்டர்பிரைசஸ், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட பங்குகளின் தற்போதைய நிலை என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
அதானி கொடுக்கபோகும் சர்பிரைஸ்.. யாருக்கெல்லாம் பலன் கிடைக்கலாம்?

அதானி எண்டர்பிரைசஸ் & அதானி டிரான்ஸ்மிஷன்
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது தற்போது 4.89% குறைந்து, 1973 ரூபாயாக உள்ளது. இதே அதானி போர்ட்ஸ் பங்கின் விலையானது 3.09% குறைந்து, 686.05 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இதே அதானி டிரான்ஸ்மிஷன் பங்கு விலையானது 4.43% சரிவினைக் கண்டு, 1995.95 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.

அதானி கிரீன் எனர்ஜி & அதானி வில்மர்
இதே அதானி கிரீன் எனர்ஜி பங்கு விலையானது 4.51% குறைந்து, 2088.35 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. அதானி டோட்டல் கேஸ் பங்கு விலையானது, சற்று குறைந்து, 2214.80 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதே அதானி வில்மர் பங்கு விலையானது, இதே அதானி வில்மர் பங்கு விலையானது, 4.99% குறைந்து, 631.65 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.

அதானி வில்மர் சரிவு ஏன்?
அதானி வில்மர் பங்கு விலையானது குறிப்பாக மூன்றாவது நாளாக இன்றும் பலத்த சரிவினைக் கண்டு, லோவர் சர்க்யூட் ஆகியுள்ளது. இது தொடர்ந்து மூலதன செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், உற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ளன, இதன் காரணமாக இந்த நிறுவனத்தின் வருவாய் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இப்பங்கின் விலையானது பலத்த சரிவினைக் கண்டுள்ளது.

ஓவர் வேல்யூ பங்குகள்
அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தின் விற்பனை விகிதம் அதிகரித்திருந்தாலும், நிகரலாபம் கடந்த ஆண்டினை காட்டிலும் சற்று சரிவினைக் கண்டுள்ளது. இதுவும் இப்பங்கு விலை சரிய காரணமாக அமைந்துள்ளது. பொதுவாக அதானி குழும பங்குகள் விலையானது, ஓவர் வேல்யூ பங்குகளாக இருப்பதால், முதலீட்டாளர்கள் புராபிட் புக்கிங் செய்யலாம். இதன் காரணமாக இப்பங்குகளின் விலை தொடர்ந்து கடந்த சில அமர்வுகளாகவே சரிவினைக் கண்டு வருகின்றது. நீண்டகால நோக்கில் இப்பங்குகளானது ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Adani Group shares have fallen as much as 5%. Why has it seen such a decline?
Shares of Adani Group, including Adani Enterprises, Adani Transmission, Adani Port, Adani Total Case and Adani Wilmer shares are down up to 5%.