வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-நடப்பு ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.8 சதவீதமாக இருக்கும் என, ‘மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் சர்வீஸ்’ நிறுவனம் அறிவித்துள்ளது.
![]() |
நடப்பு 2022ம் ஆண்டுக்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 9.1 சதவீதமாக இருக்கும் என முன்னர் கணித்து அறிவித்திருந்த நிலையில், அதை தற்போது குறைத்து, 8.8 சதவீதமாக அறிவித்துள்ளது, மூடிஸ் நிறுவனம்.இது குறித்து, இந்நிறுவன அறிக்கையில் மேலும் கூறப்பட்டு உள்ளதாவது:கடந்த ஆண்டு டிசம்பர் காலாண்டின் வளர்ச்சி, நடப்பு ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கும் எடுத்து செல்லப்பட்டது.
![]() |
இருப்பினும், கச்சா எண்ணெய், உணவு, ரசாயனம் ஆகியவற்றின் விலை உயர்வு, குடும்பங்களின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தி, அவர்களின் செலவினங்களை குறைத்துள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி உயர்வை அறிவிக்கும் நிலையில், தேவைகளுக்கான மீட்சி தாமதமாகும்.
இது போன்ற காரணங்களால், நடப்பு ஆண்டில், பொருளாதார வளர்ச்சியை 9.1 சதவீதத்திலிருந்து, 8.8 சதவீதமாக குறைத்து கணித்து அறிவித்து உள்ளோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Advertisement