ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தருகிற ஒரு பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக பார்வையாளர்களை ஈர்த்து வருகின்றன. எப்போதும் இல்லாத அளவில் சமூக ஊடகங்களில் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் அதிக அளவில் பகிரப்படுகின்றன.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வரையப்பட்ட பூக்களில் மறைந்திருக்கும் முகங்கள் எத்தனை என்று சரியாக கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் மிகவும் சுவாரஸ்யமானது. இந்த படத்தை கவனமாகப் பார்த்து, அழகான பூக்களின் படத்தில் எத்தனை முகங்கள் மறைந்திருக்கிறது என்று கண்டுபிடியுங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படம் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. ஆனால், இப்போது மக்கள் அத்தகைய படங்களைப் பார்த்து ரசிக்கிறார்கள். அழகாக வரையப்பட்ட மறைக்கப்பட்ட பூங்களில் முகங்கள் இருக்கின்றன. அவை மேலோட்டமான பார்வைக்கு தெரியாது. ஆனால், உற்று கவனிதால் பூங்களில் முகங்கள் இருப்பது தெரியும். அப்படி இந்த பூக்களில் சரியாக எத்தனை முகங்கள் இருக்கிறது என்பதுதான் உங்களுக்கான சவால்.
பூக்களில் முகம் இருப்பது தெரியவில்லை என்றால் உங்களுக்காக ஒரு குறிப்பு. பூக்கள் வரையப்பட்ட படத்தில் வலது பக்கத்தில் முகம் இருக்கிறது. படத்தை உற்று கவனித்து முகத்தைக் கண்டுபிடியுங்கள்.
மறைந்திருக்கும் முகங்களை உங்களால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், உங்களுக்கு உதவ இன்னும் ஒரு குறிப்பு தருகிறோம்.

இந்த படத்தில் மொத்தம், 4 முகங்கள் இருக்கிறதா? அல்லது 6 முகங்கள் இருக்கிறதா என்று கூறுங்கள். இந்த படத்தில், மொட்டு வரையப்பட்ட படத்தின் கீழே, இடது பக்கத்திலும், அழகான பூ இருக்கும் படத்தின் வலது பக்கத்திலும் பாருங்கள். என்ன முகங்களைக் கண்டுபிடித்துவிட்டீர்களா. இதில் 4 முகங்கள் வெளிப்படையாக தெரிகின்றன. மற்ற 2 முகங்கள் மறைந்திருக்கின்றன.உண்மையில் இது நல்ல ஒரு பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுதான்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”