கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருக்கிறதா? கவலையே வேண்டாம் அதனை அதிகரிப்பதற்காக 5 முக்கிய விஷயங்களை பற்றித் தான் பார்க்க இருக்கிறோம்.
கடன் மதிப்பெண் என்று அழைக்கப்படும் சிபில் ஸ்கோரினை அடிப்படையாகக் கொண்டு தான் வங்கிகள் உங்களுக்கு கடன் கொடுக்கலாமா? வேண்டாமா? என்பதை தீர்மானிக்கும்.
சில நேரங்களில் கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருப்பவர்களுக்கும் கடன் கிடைக்கும். ஆனால் வட்டி விகிதம் அதிகமாக இருக்கும். ஆக குறைவாக இருக்கும் உங்கள் கிரெடிட் ஸ்கோரினை அதிகரிக்க என்ன செய்யலாம்? அதிகமாக இருக்கும் கிரெடிட் ஸ்கோரினை எப்படி அப்படியே வைத்திருப்பது? வாருங்கள் பார்க்கலாம்.
எலான் மஸ்க் மீது டுவிட்டர் முதலீட்டாளர்கள் வழக்கு: என்ன காரணம்?

தொடர்ந்து கிரெடிட் ஸ்கோரை பாருங்கள்
குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறையாவது உங்களது கிரெடிட் ஸ்கோரினை பாருங்கள். இது உங்களது கடன் புரபைலில் என்ன பிரச்சனை இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். இது தவறுகள் இருந்தாலும், எளிதில் பார்க்க உதவும். இன்றைய காலக்கட்டத்தில் பல நிதி நிறுவனங்களும் எளிதில் பார்க்க உதவுகின்றன.

குறைவாக கடனை பயன்படுத்துங்கள்?
உங்களது கிரெடிட் கார்டில் உள்ள தொகையினை அளவாக பயன்படுத்துங்கள். முடிந்த அளவுக்கு 30% மேலாக செல்ல வேண்டாம். இது உங்களது சிபில் ஸ்கோரினை அதிகரிக்க பயன்படும். உங்களது செலவினங்களை கணக்கிடுங்கள். இதுவே உங்களை அதிக செலவு செய்யாமல் தடுக்கும். முடிந்தமட்டில் கிரெடிட் கார்டு பயன்பாட்டினை குறைத்து கொள்ளலாம்.

நிலுவை வேண்டாம்?
வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடனோ அல்லது கிரெடிட் கார்டு நிலுவையோ எதுவானனும், நிலுவை வைக்காதீர்கள். இது உங்களுக்கு கூடுதல் வட்டி, அபாரதத்திற்கு வழிவகுக்கும். அதோடு உங்களது சிபில் ஸ்கோரியினையும் பாதிக்கும். ஆக எதையும் மிச்சம் வைக்காமல் கடனை செலுத்தி விடுங்கள். அதேபோல குறைந்தபட்ச தொகையை செலுத்துவதை நிறுத்துங்கள். முழு தொகையையும் செலுத்த பாருங்கள். சரியான நேரத்தில் செலுத்த வேண்டிய தொகையினை சரியாக செலுத்தினாலே போதும். இதுவும் உங்களது கிரெடிட் ஸ்கோரினை சரியாக வைக்க உதவும், மேம்படுத்தவும் உதவும்.

பல விண்ணப்பங்கள் வேண்டாம்?
ஆரம்பத்தில் புதியதாக கிரெடிட் கார்டு வாங்க பலரும் ஆசைப்படுவர். இதன் மூலம் பல இடங்களில் விண்ணப்பிப்பர். அதிகளவில் விண்ணப்பிப்பது கூட சில நேரங்களில் உங்களது கிரெடிட் ஸ்கோரினை பாதிக்கலாம். இது கிரெடிட் கார்டுக்கு மட்டும் அல்ல, கடனுக்கு அடிக்கடி விண்ணப்பிப்பதையும் தவிர்க்கலாம். இதுவும் உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறைய வழிவகுக்கலாம்.
Here are 5 key pointers in moving your credit score
What can you do to boost your credit score? How to maintain a high credit score? What can be done for it.