ஈரோட்டில் பட்டப்பகலில் பெண் கழுத்து நெரித்து கொலை

ஈரோட்டில் பட்டப்பகலில் பெண் ஒருவர் மர்ம நபர்களால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈபிபி நகர் பிபி கார்டன் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி என்ற இளம்பெண் கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக 6 மாத காலமாக தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் அவரது வீட்டின் அருகில் உள்ளவர்கள் புவனேஸ்வரியை பார்க்க சென்ற போது அங்கு படுக்கை அறையில் கழுத்து நெரிக்கப்பட்டு வாயில் … Read more

இலங்கையில் இன்று தமிழர்களை சந்தித்து குறைகளை கேட்கிறார் பாஜக தலைவர் அண்ணாமலை

சென்னை: இலங்கை தமிழரின் அழைப்பை ஏற்று, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இலங்கை சென்றுள்ளார். அங்கு தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் இன்று நடைபெறும் மே தின விழாவில் பங்கேற்கிறார். அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. அந்நாட்டுக்கு இந்தியா பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இதுமட்டுமின்றி, இலங்கையில் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக வீடு வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு நன்றி கூறும் விதமாக,தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் மே 1-ம் தேதி … Read more

58 வயதில் 10-ம் வகுப்பு தேர்வெழுதும் ஒடிசா எம்எல்ஏ

புவனேஸ்வர்: ஒடிசாவை சேர்ந்த 58 வயதான எம்எல்ஏ அங்கத கன்ஹர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகிறார். ஒடிசாவில் கடந்த 29-ம் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 5.8 லட்சம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். அவர்களோடு புல்பானி தொகுதி பிஜு ஜனதா தளம் எம்எல்ஏ அங்கத கன்ஹரும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி வருகிறார். கந்தமால் மாவட்டம், பிதாபரி கிராமத்தில் அமைந்துள்ள ருஜன்ஜி உயர்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியரோடு இணைந்து எம்எல்ஏவும் … Read more

சினிமா பாணியில் உக்ரைன் அதிபரை கொல்ல முயற்சி: அதிர்ச்சி தகவல்!

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ரஷ்ய ராணுவம், விமானப்படை, கடற்படை என முப்படைகளும் உக்ரைனைத் தாக்கி வருகின்றன. சர்வதேச கண்டனம், எதிர்ப்பு என எதையும் கண்டு கொள்ளாமல் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், இரு தரப்புக்கும் இடையே இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் எவ்வித ஆக்கப்பூர்வமாக முடிவுகளும் எட்டப்படவில்லை. இதனிடையே, மரியுபோல் நகரை கைப்பற்றியுள்ள ரஷ்யா, … Read more

ஜெர்மனியில் புகழ்பெற்ற பியர் திருவிழா கோலாகலத் தொடக்கம்

ஜெர்மனியில் புகழ்பெற்ற பியர் திருவிழா உற்சாக கொண்டாட்டத்துடன் தொடங்கியது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பியர் திருவிழா தடைபட்ட நிலையில், தற்போது மீண்டும் கொண்டாடப்படுகிறது. பாரம்பரிய உடை அணிந்த மக்கள் பல்வேறு கலை நிகழ்வுகளில் ஈடுபட்டனர். பியர் திருவிழாவுக்கு பெயர்போன முனிச் நகர மேயர் விழாவைத் தொடங்கி வைத்ததும் முண்டியடித்துக் கொண்டு மதுப் பிரியர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதக்கத் துவங்கினர். 2ஆண்டுகளுக்கு பிறகு விழா விமரிசையாக நடப்பதால் பல்வேறு நாடுகளில் இருந்து 60 லட்சம் பேர் … Read more

மகாராஷ்டிரா உருவான தினம் இன்று கொண்டாட்டம்.!

மகாராஷ்டிரா உருவான தினத்தை முன்னிட்டு மும்பை தலைமைச் செயலகமான மந்த்ராலயா மற்றும் பிர்ஹன்மும்பை முனிசிபல் கார்பரேஷன் உள்ளிட்ட கட்டிடங்கள் மூவர்ண நிறத்தில் ஒளியூட்டப்பட்டுள்ளன. 1960ஆம் ஆண்டு மே 1ந்தேதி மகாராஷ்டிரா மாநிலம் உருவாக்கப்பட்டது. இதையொட்டி சிவாஜி பார்க்கில் கொண்டாடப்பட உள்ள நிகழ்ச்சியில் மாநில ஆளுநர், முதலமைச்சர் உத்தவ்தாக்கரே உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். Source link

அச்சுறுத்தல் ஏற்பட்டால்… மீண்டும் மிரட்டல் விடுத்த கிம் ஜோங் உன்

வடகொரியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணு ஆயுதங்களை முன்கூட்டியே பயன்படுத்துவோம் என வடகொரியா தலைவர் கிம் ஜோங் உன் மிரட்டல் விடுத்துள்ளார். வடகொரியா ராணுவம் நிறுவப்பட்டதின் 90-வது ஆண்டு தினத்தையொட்டி கடந்த 25-ம் திகதி தலைநகர் பியாங்யாங்கில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு முன்னெடுக்கப்பட்டது. குறித்த அணிவகுப்பை நேரில் பார்வையிட்ட பின்னர் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய கிம் ஜோங் உன், வடகொரியா தனது அணு ஆயுத திறனை அதிகவேகத்தில் மேம்படுத்தும் என சூளுரைத்தார். மட்டுமின்றி, நாட்டுக்கு ஒரு அச்சுறுத்தல் … Read more

எந்த திட்டமாக இருந்தாலும் அதன் பயனை மக்களுக்கு கொண்டு செல்லும் வரை ஓயமாட்டேன் – முதலமைச்சர் ஸ்டாலின்

திண்டுக்கல்: எந்த திட்டமாக இருந்தாலும் அதன் பயனை மக்களுக்கு கொண்டு செல்லும் வரை ஓயமாட்டேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் நடந்த அரசு விழாவில் ரூ.40.45 கோடி மதிப்பில் 60 திட்டப் பணிகளை திறந்து வைத்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ந்த சூழ்நிலையிலும் உங்களில் ஒருவனாக இருந்து என்னுடைய கடமையை ஆற்றுவேன். திட்டங்களை கண்காணிப்பேன்திட்டத்தை அறிவித்தால் நிச்சயம் செயல்படுத்தி காட்டுவேன். திட்டம் குறித்து வாரந்தோறும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகளிடம் கேட்டு அறிந்து கொள்வேன் என்று கூறினார்.

சென்னையில் மது அருந்திவிட்டு ஏற்பட்ட தகராறில் இருவேறு இடங்களில் 3 பேர் கொலை

சென்னை: சென்னையில் மது அருந்திவிட்டு ஏற்பட்ட தகராறில் இருவேறு இடங்களில் 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். திருவான்மியூரில் மது அருந்திய போது நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் சதீஷ்குமார் (27), அருண்(22), கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளனர். சதீஷ்குமார் மற்றும் அருண் கொலை தொடர்பாக தினேஷ் என்பவரை கைது செய்து போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.

சினிமாவில் சச்சின் மகள்

மும்பை: சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா விரைவில் இந்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளதாக பாலிவுட்டில் தகவல் பரவி வருகிறது. இதற்காக அவர் நடிப்புப் பயிற்சியையும் பெற்றுள்ளாராம். தங்களது மகள் விருப்பத்திற்கு பெற்றோர் சச்சின், அஞ்சலி எந்தத் தடையும் சொல்லவில்லையாம்.ஏற்கெனவே சாரா இந்தி சினிமாவில் அறிமுகமாக உள்ளார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால், அப்போது அதை சச்சின் மறுத்தார். தனது மகள் படிப்பில் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார். இப்போது சாரா அறிமுகமாவது பற்றிய செய்திகள் மீண்டும் … Read more