இந்த திருமண சான்றிதழ்களுக்கு அங்கீகாரம் இல்லை : உச்சநீதிமன்றம் அதிரடி!!

ஆர்ய சமாஜ் வழங்கிய திருமணச் சான்றிதழுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற காதல் திருமணம் தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. இளைஞர் ஒருவர் தங்கள் மகளை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறிய பெற்றோர், தங்கள் மகள் மைனர் என்று வழக்குப்பதிவு செய்தனர்.

அந்த இளைஞர் தனது மனுவில், அப்பெண் மேஜர் என்றும், அவரது சொந்த விருப்பத்தின் பேரில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததாக கூறியினார். ஆர்ய சமாஜ் மந்திரில் திருமணம் நடந்தது என்று கூறி, மத்திய பாரதிய ஆர்ய பிரதிநிதி சபா வழங்கிய திருமணச் சான்றிதழையும் சமர்ப்பித்தார்.

SC

ஆனால் அந்த திருமணச் சான்றிதழை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. இதனால் ஆர்ய சமாஜின் மூலம் திருண சான்றிதழ் வாங்கியவர்கள் கலக்கத்தில் உள்ளனர். இந்து சீர்திருத்த அமைப்பான ஆர்ய சமாஜ்  1875ஆம் ஆண்டு சுவாமி தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பட்டது.

நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி மற்றும் பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆர்ய சமாஜத்தின் பணி மற்றும் அதிகார வரம்பு திருமணச் சான்றிதழ் வழங்குவது அல்ல என்று தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் மட்டுமே திருமண சான்றிதழ்களை வழங்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

newstm.in


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.