வங்கியில் வேலை வாய்ப்பு – உடனே அப்ளே பண்ணுங்க!!

நாடு முழுவதும் 1,544 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஐடிபிஐ வங்கி அழைப்பு விடுத்துள்ளது

சமீபத்திய ஆட்சேர்ப்பு அறிவிப்பில் IDBI வங்கி மொத்தம் 1,044 எக்சிகியூட்டிவ் போஸ்ட்களுக்கான காலியிடங்களையும், 500 அசிஸ்டெண்ட் மேனேஜர் போஸ்ட்களுக்கான காலியிடங்களையும் அறிவித்துள்ளது.

தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு வரும் ஜூன் 17 வரை idbibank.in என்ற வெப்சைட்டிற்கு சென்று விண்ணப்பிக்கலாம். Careers லிங்கை கிளிக் செயது, Current Openings என்பதை கிளிக் செய்யவும்.

பின்னர் IDBI Executive and Assistant Manager Recruitment 2022 என்ற லிங்கை கிளிக் செய்யவும். ஒரு புதிய பேஜ் ஓபன் ஆனவுடன் அதில் கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை குறிப்பிட்ட சைசில் அப்லோட் செய்யவும். அப்ளிகேஷன் ஃபார்முக்கான கட்டணத்தைச் செலுத்தி அதை சமர்ப்பிக்கவும்.

IDBI-bank

அசிஸ்டெண்ட் மேனேஜர் போஸ்ட்களுக்கு விண்ணப்பதாரர்கள் முதலில் மணிப்பால்  மற்றும் நிட் ஆகியவற்றுடன் இணைந்து வழங்கப்படும் 1 வருட போஸ்ட் கிராஜூவேட் டிப்ளமோ இன் பேங்கிங் அண்ட் ஃபைனான்ஸ் படிப்பில் சேர வேண்டும்.

அந்த படிப்பை வெற்றிகரமாக முடிக்கும் விண்ணப்பதாரர்கள் IDBI வங்கியில் அசிஸ்டெண்ட் மேனேஜர் கிரேடு’ (Assistant Manager Grade ‘A’) போஸ்ட்டில் சேரலாம்விண்ணப்பதாரர்களை தேர்வு செய்ய வங்கி ஜூலை மாதம் ஆன்லைன் தேர்வை நடத்த உள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தேர்வில் பங்கேற்க விரும்பும் விண்ணப்பதாரர்கள்  ஜூன் 17, 2022க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

bank

கல்வித் தகுதியில் விண்ணப்பதாரர்கள் இந்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். டிப்ளமோ படிப்பை மட்டும் வைத்திருப்பது தகுதி அளவுகோலாக கருதப்படாது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.