4 ஆண்டுகளாக ராகுல் காந்தியை சந்திக்க முடியவில்லை: பிரித்விராஜ் சவான்

மும்பை :

காங்கிரஸ் கட்சியை சீரமைக்க அக்கட்சியினர் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில் மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியும், கட்சியின் மூத்த தலைவருமான பிரிதிவிராஜ் சவான் கட்சி தலைமை மீது தனது அதிருப்தியை உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

நான் டெல்லிக்கு செல்லும்போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை அவ்வப்போது சந்திப்பேன். ஆனால் அவரது உடல்நிலை தற்போது முன்பு போல் இல்லை. அவர் எப்போதும் மற்றவர்களை வரவேற்பதுடன், அவர்களுடன் பேச தயாராக இருப்பார். நானும் சோனியா காந்தியை நேரம் கிடைக்கும்போதெல்லாம் சந்தித்திருக்கிறேன்.

4 ஆண்டுகள் ஆகி விட்டது ஆனால் நீண்ட நாட்களாக ராகுல் காந்தியை சந்திக்க முடியவில்லை. அவரை சந்தித்து 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது என்று நினைக்கிறேன். கட்சியின் தலைமை அணுகக்கூடிய அளவில் இல்லை என்பதே பெரிய பிரச்சினையாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.