பாஜகவில் இணையும் நடிகை ஜோதிகா சூர்யா குடும்பத்தை சேர்ந்தவர்.?! அரசியல் வட்டாரத்தில் ஆணித்தரமாக கசியும் தகவல்.!  

நடிகர் ரஜினிகாந்த், கமல், பிரபு, சரத்குமார், கார்த்திக் உள்ளிட்ட நாயகர்களுடன் நடித்த நடிகை நக்மா, அன்றைய காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தார். இவரின் சகோதரித்தான் நடிகை ஜோதிகா சூர்யா. 

கடந்த 2004-ம் ஆண்டு நடிகை நக்மா காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தனது அரசியல் பிரேவசத்தை தொடங்கினார், ஆண்டு முதல் சுமார் 18 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சிக்காக உழைத்தார். 

இதன்காரணமாக அவருக்கு மும்பை காங்கிரஸ் துணைத்தலைவர் உள்ளிட்ட சில பதவிகள் வழங்கப்பட்டது. ஆனால், அவருக்கு எம்.எல்.ஏ., எம்.பி., மந்திரி ஆக காங்கிரஸ் தலைமை வாய்ப்பு வழங்கவில்லை. 

கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை வேட்பாளர் பட்டியல் வெளியானது. தனக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருந்த நடிகை நக்மாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

இந்த ஆத்திரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக டுவிட்டரில் நடிகை நக்மா பகிரங்கமாக பல கருத்துகளை பதிவிட்டார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் காங்கிரஸ் கட்சி இதனை கண்டுகொள்ளவே இல்லை.

அதிருப்தியில் இருக்கும் நக்மாவை பல மாநில கட்சிகளும், பாஜகவும் தங்கள் கட்சிக்கு கொண்டுவர காய் நகர்த்த ஆரம்பித்துள்ளது. தூது அனுப்பப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 

குறிப்பாக அரசியல் நோக்கர்கள் நடிகை நக்மா பாஜகவில் தான் இணைவார் என்று சொல்கின்றனர். ஆக, நடிகை ஜோதிகா சூர்யாவின் சகோதரி நக்மா பாஜகவில் இணைவார் என்ற செய்தி விரைவில் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.