புதுடில்லி கடந்த ஆறு மாதங்களில் 9,000 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் நிலக்கரி ஏற்று செல்வதற்காக, 1,900 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.நாளொன்றுக்கு, 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்களை இந்திய ரயில்வே இயக்கி வருகிறது. பல்வேறு காரணங்களால் சில ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு ரயில்வே அளித்துள்ள பதில்:கடந்த ஆறு மாதங்களில், 9,000 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பராமரிப்பு பணிகளுக்காக, 6,995 ரயில்களும், மார்ச் – மே மாதங்களில் நிலக்கரி ஏற்றிச் செல்வதற்காக, 1,934 ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.நாடு முழுதும், 1.15 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வே பணிகள் நடந்து வருகின்றன.
இதனால் ரயில்வே பராமரிப்பு பணிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. அதனால் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.நாடு முழுதும் நிலக்கரி தட்டுப்பாட்டால் மின்சார வினியோகம் பாதிக்கப்பட்டது. இதைஅடுத்து, மார்ச் – மே மாதங்களில் நிலக்கரி ஏற்றிச் செல்லும் ரயில்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. அதனால், பல பயணியர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மே மாதத்தில் மட்டும், 13 ஆயிரம் கோடி கிலோ நிலக்கரியை ரயில்வே கையாண்டுள்ளது. ஒரு மாதத்தில் கையாண்ட சரக்குகளில் இதுவே அதிகபட்சம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement