ஆர்எஸ்எஸ் அலுவலகங்களை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுத்த நபர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
லக்னோவில் வசிக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த ஒருவருக்கு வாட்ஸ்அப் குரூப்பில் இணைவதற்கான லிங்க், தெரியாத அலைபேசி எண்ணில் இருந்து கிடைத்துள்ளதாகவும், இதில் ஒரு கும்பல் கர்நாடகாவில் 4 இடங்களிலும் உத்தரப்பிரதேசத்தில் 2 இடங்களிலும் குண்டு வைக்க போவதாக உத்தரப் பிரதேச காவல்துறை தீவிரவாத தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதுகுறித்து எம்.ஏ.எஸ். 325/22, பிரிவு 507 மற்றும் 66 (F) தகவல் தொழில்நுட்ப (திருத்தம்) சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் லக்னோவில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
விசாரணையில் அந்த எண்ணைப் பயன்படுத்திய குற்றவாளி அடையாளம் காணப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவரின் இருப்பிடம் தமிழகம் என தெரிய வந்ததும், உடனடியாக தமிழ்நாடு காவல்துறையின் உள் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டது. குற்றஞ்சாப்பட்டவர் தடுப்பு காவலில் வைக்கபட்ட நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர் ராஜ் முகமது எனவும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும் தெரிய வந்துள்ளது.
உத்தரப்பிரதேச காவல்துறை தீவிரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்டவரின் விரிவான விசாரணைக்குப் பிறகு அவரை அங்கு அழைத்து வந்து விசாரணை நடத்த திட்டமிட்டிடுள்ளனர்.
இதையும் படிக்கலாம்: சென்னையில் பெண் காவலரிடம் அத்துமீறல் – 2 பேர் கைதுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM