அரசு ஊழியர்கள் கார் வாங்க தடை – அரசு அதிரடி உத்தரவு!

பாகிஸ்தான் நாட்டில் அரசு அதிகாரிகள் கார் வாங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

அண்டை நாடான பாகிஸ்தான், கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் விலை உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால், பொது மக்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதால் சர்வதேச நாணய நிதியத்திடம் பாகிஸ்தான் அரசு கடன் கேட்டுள்ளது. பாகிஸ்தானிடம் அந்நிய செலாவணி கையிருப்பு குறைவாக உள்ளதால் வரும் நாட்களில் நெருக்கடி அதிகரிக்கும் நிலை உள்ளது. கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்நிலையில் நிதிப் பற்றாக்குறையை கட்டுப்படுத்தவும் சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்பு பணத்தை பாதுகாக்கவும் பாகிஸ்தான் அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதையடுத்து பணக்காரர்கள் மீதான வரியை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.

கொரோனா முககவசங்களை தீயிட்டு எரிக்க அரசு முடிவு… காரணம் இதுதான்!

மேலும், அரசு அதிகாரிகள் புதிய கார் வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 2022 – 2023 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை வெளியிடும் அமைச்சர் இஸ்மாயில் கூறுகையில், “பணக்காரர்கள் மீதான வரி உயத்தப்படுகிறது. கார்கள் இறக்குமதி, அரசு அதிகாரிகள் புதிய வாகனங்கள் வாங்குவது ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்படுகிறது” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.