சென்னை: தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தருமபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்றும் இன்றும் நாளையும் லட்சத்தீவு தென்கிழக்கு அரபிக்கடல், கேரளா வட ஆந்திரா, மத்திய மேற்கு வங்கக்கடலில் சூறாவளி காற்று வீசும் என்றும் தெரிவித்துள்ளனர். மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த சூறாவளி வீச வாய்ப்புள்ளதால் மீனவர்களுக்கு இன்றும் நாளையும் எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்
