அமேசானுக்கு குட்டு வைத்த தீர்ப்பாயம்.. ரூ200 கோடி அபராதம் கன்பார்ம்..சுக்கு நூறாக உடைந்த நம்பிக்கை!

அமேசான் நிறுவனத்திற்கு 200 கோடி ரூபாய் அபராதம் விதித்து, சிசிஐயின் உத்தரவினை உறுதி செய்து, தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் (NCLAT) உத்தரவிட்டுள்ளது.

இந்த அபராதத்தினை அமேசான் நிறுவனம் 45 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்திய தொழில் போட்டி ஆணையம் இகாமர்ஸ் நிறுவனத்திற்கும், போட்டி ஆணையத்திற்கும் இடையேயான ஒப்பந்தித்தினை நிறுத்தி வைக்க கூறிய உத்தரவையும் உறுதி செய்துள்ளது.

ஜூன் மாதத்தில் மட்டும் ரூ.14,000 கோடி: அந்நிய முதலீடுகள் வெளியேற்றத்தால் தடுமாறும் பங்குச்சந்தை!

அமேசானுக்கு பின்னடைவு

அமேசானுக்கு பின்னடைவு

தொடர்ந்து ரிலையன்ஸ் ரீடெயில் – பியூச்சர் குழும ஒப்பந்தத்திற்கு மிக இடைஞ்சலாக இருந்து வந்த அமேசானுக்கு, இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகின்றது.

உண்மையில் என்ன தான் நடந்தது? எதற்காக இந்த அபராதம், அமேசானுக்கும் பியூச்சர் குழுமத்திற்கும் என்ன சம்பந்தம்? பியூச்சர் குழுமத்திற்கும் ரிலையன்ஸூக்கும் என்ன சம்பந்தம் வாருங்கள் பார்க்கலாம்.

சிசிஐ முடிவு

சிசிஐ முடிவு

அமெரிக்க இகாமர்ஸ் நிறுவனமான அமேசானுக்கு இந்திய தொழில் போட்டி ஆணையம் கடந்த ஆண்டே (CCI) 202 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு அமேசான் நிறுவனம் ஃப்யூச்சர் கூப்பன்ஸ் குரூப்பில் முதலீடு செய்ய சிசிஐ அனுமதி கொடுத்திருந்தது. அதனைக் கொண்டு ஃப்யூச்சர் நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை வாங்க அமேசான் ஒப்பந்தம் மேற்கொண்டது.

மோசடி
 

மோசடி

இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு செய்ய அன்னிய செலவாணி சட்டங்களுக்கு உட்பட்ட நடக்க வேண்டும். ஆனால் அமேசானோ சில விதிமுறைகளை மீறியதாகவும் கூறப்பட்டது. சில தகவல்களை வேண்டுமெண்றெ மறைத்ததாகவும் பியூச்சர் கூப்பன்ஸ் ஒப்பந்தத்தினை அமேசான் பெற்றது கண்டறியப்பட்டது. இது குறித்த புகாரின் அடிப்படையில் தான் அமேசானுக்கு 202 கோடி ரூபாய் அபராதமும் சிசிஐ விதித்தது.

எப்போது முடியும்?

எப்போது முடியும்?

பியூச்சர் குழும நிறுவனம் பெரும் நிதி நெருக்கடியில் இருந்து வரும் நிலையில், அந்த நிறுவனத்திற்கு பல வங்கிகள் கடன் கொடுத்துள்ளன. தற்போது பியூச்சர் குழுமத்துடன் இணைந்து வங்கிகளும் இந்த பிரச்சனை எப்போது முடியும் என காத்துக் கொண்டிருந்தன. இந்த நிலையில் தேசிய தீர்ப்பாயம் இப்படியொரு தீர்ப்பினை கொடுத்து பல தரப்பினர் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

வழக்கு மேல் வழக்கு

வழக்கு மேல் வழக்கு

எனினும் இந்த பிரச்சனை இத்துடன் முடிந்துவிட்டதா? என்றால் நிச்சயம் இல்லை எனலாம். ஏனெனில் பியூச்சர் குழுமம் மீது அமேசானும், அமேசான் மீது பியூச்சர் குழுமமும் மாறி மாறி வழக்கு தொடர்ந்து வருகின்றன.

எவ்வளவு பங்குகள்?

எவ்வளவு பங்குகள்?

ரிலையன்ஸ் ஒப்பந்தத்திற்கு முன்பே, அமெரிக்காவின் ஈ காமர்ஸ் நிறுவனமான அமேசான், பியூச்சர் கூப்பன்ஸ் நிறுவனத்தில் 49% பங்குகளை வாங்கியிருந்ததுது. பியூச்சர் குழும சில்லறை நிறுவனத்தில் 7.3% பங்கினையும் வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் தான் கிஷோர் பியானிக்கு சொந்தமான பியூச்சர் நிறுவனத்தின் பங்குகளை வாங்க ரிலையன்ஸ் திட்டமிட்டிருந்தது.

கடன் பிரச்சனையால் விற்பனை

கடன் பிரச்சனையால் விற்பனை

பியூச்சர் குழுமம் தொடர்ந்து கடன் அதிகரித்ததை தொடர்ந்து, ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய பேச்சு வார்த்தை நடத்தி வந்தது. இதனையடுத்து ப்யூச்சர் குழுமத்தினை கையகப்படுத்த 24,713 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தமும் போடப்பட்டது. ஆனால் மேற்கண்ட பிரச்சனைக்கு மத்தியில் இழுபறியாகவே இருந்து வருகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

NCLAT has upheld CCI’s order imposing a fine of Rs 200 crore on Amazon

The National Company Law Tribunal (NCLAT) has upheld CCI’s order imposing a fine of Rs 200 crore on Amazon.

Story first published: Monday, June 13, 2022, 15:30 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.