கிரிக்கெட் மட்டையால் மனைவி அடித்து கொலை.. திருமண நாளன்று நடந்த கொடூரம்!

சேலம் மாவட்டதை சேர்ந்தவர்கள் கீர்த்தி ராஜ் மற்றும் தனஸ்ரீ தம்பதி. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.இந்நிலையில் கீர்த்தி ராஜ் வரதட்சணை கேட்டு மனைவியை அடிக்கடி கொடுமைப்படுத்தியுள்ளார்.

கணவரின் கொடுமையால் வீட்டை விட்டு வெளியேறிய தனஸ்ரீ தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர், மனைவியை சமாதனம் செய்து நேற்று வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார் கீர்த்தி ராஜ். அன்றிருவே தங்கள் மகள் தற்கொலை செய்து கொண்டதாக கீர்த்தி ராஜ், தனஸ்ரீ பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனே புறப்பட்டு கீர்த்தி ராஜ் வீட்டிற்கு வந்துள்ளனர்.

அப்போது மகளில் உடலில் காயங்கள் இருந்துள்ளது. மேலும் வீடு முழுவதும் ரத்தக்கரை இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் போலிஸாரிடம் புகார் அளித்துள்ளனர். புகாரில், “திருமணமான சில மாதங்களில் ஆடி கார் கேட்டு மகளை அவரது கணவர் அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இந்த கொடுமையான வாழ்க்கை வேண்டாம் என கூறிதான் மகள் எங்களுடன் வசித்து வந்தார்.

ஆனால் அவரை சமாதானம் செய்து அழைத்துச் சென்று கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்துள்ளனர்” என தெரிவித்துள்ள்ளனர். மேலும், இந்த தம்பதிகளின் மூன்றாம் ஆண்டு திருமண நாளில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இருவரும் தலைகவசம் அணிந்துக்கொண்டு ஊர்வலமாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி பிரபலமானவர்கள் என்பது கூடுதல் தகவல்..  


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.