வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-‘டெல்டா’ மற்றும் ‘ஒமைக்ரான்’ வகை கொரோனா வைரஸ் மீது, ‘கோவாக்சின்’ தடுப்பூசியின் மூன்றாவது ‘டோஸ்’ சிறப்பாக செயல்படுவது, சமீபத்திய சோதனையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
![]() |
கொரோனா தொற்று பரவல் பெரும் அளவில் குறையத் துவங்கியதும், தடுப்பூசி செலுத்துபவர்கள் எண்ணிக்கையும் சரிய துவங்கியது. தற்போது, தொற்று பரவல் சில மாநிலங்களில் அதிகரிக்க துவங்கி உள்ளது. எனவே, இரண்டாவது டோஸ் மற்றும் மூன்றாவது டோஸ் எனப்படும் ‘பூஸ்டர் டோஸ்’ போடாதவர்கள், உடனடியாக செலுத்திக் கொள்ள, மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், கோவாக்சின் தடுப்பூசியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது டோஸ் செலுத்திக் கொண்டவர்கள் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு திறன் குறித்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் ‘பாரத் பயோடெக்’ நிறுவனம், சமீபத்தில் சோதனை மேற்கொண்டது. விலங்கின் உடலில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
![]() |
இதன் முடிவில், கோவாக்சின் மூன்றாவது டோஸ் செலுத்தியவர்களுக்கு, டெல்டா மற்றும் ஒமைக்ரான் வகை தொற்றில் இருந்து, போதிய பாதுகாப்பு கிடைப்பது நிரூபணமாகி உள்ளது. மூன்றாவது டோஸ் செலுத்தியவர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டாலும், மற்றவர்களுடன் ஒப்பிடும்போது, நுரையீரல் தொற்று குறைவாகவே இருப்பது தெரிய வந்துள்ளது.
Advertisement

