நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், ஏ.வி.எம் ன பிரமாண்ட கூட்டணி அமைத்து உருவான படம் ‘சிவாஜி’. படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. அதையொட்டி ஏ.வி.எம் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் மேக்கிங் படங்களை வெளியிட்டிருந்தது. இயக்குநர் ஷங்கர், நடிகர் ரஜினியை சந்தித்து படம் குறித்து பேசியதை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதற்கு ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
Watched Sivaji for more than 15 times in theatres
An amazing theatrical experience & one of thalaivar @rajinikanth ‘s best style, swag & mass ❤️❤️❤️
Thank you @shankarshanmugh sir & @avmproductions for this memorable film #15yearsofSivaji https://t.co/f5KwdCVaYC
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) June 15, 2022
இதற்கிடையில், சிவகார்த்திகேயன் சிவாஜி படத்தை திரையரங்கில் பார்த்த அனுபவத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான நடிகர் சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர்களின் பதிவுக்கு பதிலளித்து இந்த ட்வீட்டை பதிவிட்டிருந்தார். சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பதிவில், ` ‘சிவாஜி’ படத்தை 15 தடவைக்கு மேல் தியேட்டர்களில் பார்த்திருக்கிறேன். அது ஒரு அற்புதமான திரையரங்கு அனுபவம் . தலைவர் ரஜினிகாந்தின் சிறந்த ஸ்டைல்களில் இந்தப் படமும் ஒன்று. ஸ்வாக் & மாஸ். இப்படி ஒரு மறக்க முடியாத படத்தை உருவாக்கிய இயக்குநர் ஷங்கர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றி’ எனப் பதிவிட்டிருந்தார்.