89 சதவீதம் பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி| Dinamalar

புதுடில்லி-நாட்டில், 18 வயதுக்கு மேற்பட்ட 89 சதவீத மக்கள் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:நேற்று காலை நிலவரப்படி நாடு முழுதும், 195.67 கோடி, ‘டோஸ்’ தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதையடுத்து, 18 வயதுக்கு மேற்பட்ட 89 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.

latest tamil news

12 – 14 வயதினரில் 75 சதவீத பேர் முதல் டோசும், 18 – 59 வயதினரில் 36.61 லட்சம் பேர் முன்னெச்சரிக்கை டோசும், 15 – 18 வயதுடையோரில் 5.99 கோடி பேர் முதல் டோசும் செலுத்தி உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.