அதிவேகமாக வந்த பைக், பேருந்து மீது மோதி 2 இளைஞர்கள் படுகாயம்.. சிசிடிவிக் காட்சி வெளியீடு..!

புதுச்சேரி அடுத்த ஆரோவில் அருகே சாலையை கடப்பதற்காக அதிவேகமாக வந்த பைக், பேருந்து மீது மோதியதில் 2 இளைஞர்கள் காயமடைந்த விபத்தின் சிசிடிவிக் காட்சி வெளியாகியுள்ளது. கடந்த 19ஆம் தேதி புதுச்சேரி சேதராபட்டில் இருந்து திருச்சிற்றம்பலம் நோக்கி பைக்கில் சென்றுக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள், திருச்சிற்றம்பலம் அம்பேத்கர் சிலை அருகே சென்ற போது வலதுபுறம் வந்த பேருந்தை முந்தி சென்று சாலையை கடக்க முயன்றனர். அப்போது அவ்வழியாக வந்த மற்றொரு பேருந்து மீது இளைஞர்கள் சென்ற பைக் மோதியதில் … Read more

“அதிமுகவை கபளீகரம் செய்ய நினைக்கும் சசிகலாதான் முதன்மை எதிரி” – கே.பி.முனுசாமி

கிருஷ்ணகிரி: “அதிமுகவில் தன் தார்மிக உரிமையை இழந்துவிட்டார் ஒபிஎஸ்” என அதிமுக மூத்த தலைவர் கே.பி.முனுசாமி தெரிவித்தார். இதுதொடர்பாக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ”பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ஏ மற்றும் பி ஃபார்மில் கையொப்பமிட குறிப்பிட்டுள்ளார். இந்தச் சூழலில் ஏ பார்ம் மற்றும் பி பார்மில் கையொப்பம் இடுகின்ற தார்மிக உரிமையை ஓபிஎஸ் இழக்கிறார். காரணம், கட்சியின் பொதுக்குழு செயற்குழு கூடுவதை … Read more

ஆர்எஸ்எஸ் தொண்டர் டு மகாராஷ்டிர முதல்வர் – யார் இந்த ஏக்நாத் ஷிண்டே?

மும்பை: மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா அதிருப்தி அணி இணைந்து புதிய கூட்டணி அரசை அமைத்துள்ளன. சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே, மாநிலத்தின் புதிய முதல்வராக நேற்று பதவியேற்றார். முதல்வராவார் என எதிர்பார்க்கப்பட்ட பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக பதவியேற்றார். மகாராஷ்டிராவில் கடந்த 2019-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 105, அதன் கூட்டணி கட்சியான சிவசேனா 56 தொகுதிகளில் வெற்றி பெற்றன. காங்கிரஸுக்கு 44, தேசியவாத காங்கிரஸுக்கு 54 இடங்கள் கிடைத்தன. … Read more

நடிகர் கமல்ஹாசனுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா..!

நடிகர் கமல்ஹாசனுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளை சேர்ந்த நடிகர்கள், நடிகைகள், தொழிலதிபர்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோருக்கு நீண்ட கால குடியுரிமையை வழங்கும் விதமாக கடந்த 2019-ம் ஆண்டு முதல் கோல்டன் விசா வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஷாருக்கான், அமிதாப்பச்சன்,  விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்ட பலருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது.  Source link

மணிப்பூர் நிலச்சரிவில் 8 பேர் புதைந்து பலி; ராணுவ வீரர்கள் உட்பட 70 பேர் மாயம்

இம்பால்: மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். பிராந்திய ராணுவ வீரர்கள் உட்பட 70க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் கடந்த ஒரு மாதமாகவே கனமழை பெய்து வருகிறது. அசாம், திரிபுராவில் பெய்த மழையால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இந்த மாநிலங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அசாமில் மழை, வெள்ளத்தால் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், … Read more

எம்.பி.க்கள் ரயில் பயணத்திற்கு 5 ஆண்டுகளில் ரூ 62 கோடி செலவு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி-முன்னாள் மற்றும் இந்நாள் லோக்சபா எம்.பி.,க்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் ரயில்களில் பயணம் செய்த வகையில் அரசுக்கு 62 கோடி ரூபாய் செலவு ஏற்பட்டுள்ளதாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் வெளியாகி உள்ளது. லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்கள் மற்றும் அவரது மனைவியர், ரயில்களில் முதல் வகுப்பு குளிர்சாதன பெட்டிகளில் இலவசமாக பயணிக்க சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல, முன்னாள் எம்.பி.,க்கள் முதல் வகுப்பு ‘ஏசி’ பெட்டியில் தனியாகவும், … Read more

மோகன்லாலுக்கு வில்லனாக மாறும் ஹரீஷ் பெராடி

மலையாளத்தில் மிகவும் அதிக படங்களில் இணைந்து பணியாற்றியுள்ள எவர்கிரீன் கூட்டணி என்றால் அது மோகன்லால், இயக்குனர் பிரியதர்ஷன் கூட்டணி தான். கடைசியாக இவர்கள் மரைக்கார் என்கிற படத்தில் இணைந்து பணியாற்றினார்கள். இந்த நிலையில் 'ஒலவும் தீரவும்' என்கிற படத்தில் மீண்டும் மோகன்லாலை இயக்குகிறார் பிரியதர்ஷன். ஆனால் இது திரைப்படம் அல்ல குறும்படம். ஆம், ஓடிடி நிறுவனம் மலையாளத்தில் 10 குறும்படங்களை கொண்ட ஆந்தாலாஜி படம் ஒன்றை தயாரிக்கிறது. இவை அனைத்தும் பிரபல மலையாள கதாசிரியர் எம்டி வாசுதேவன் … Read more

அருவருப்பான தலைவர்கள்: புடின் பதிலடி| Dinamalar

மாஸ்கோ :”மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் அளவுக்கதிகமாக குடிப்பதால், அரை நிர்வாணமாக நின்றாலும் அருவருப்பாகவே தோன்றுவர்,” என, ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்து உள்ளார். கராத்தே வீரரான ரஷ்ய அதிபர் புடின், வெற்றுடம்புடன் அவ்வப்போது செய்யும் சாகசங்கள், ஊடகங்களில் வெளியாவது வழக்கம். இதை சில தினங்களுக்கு முன் ஜெர்மனியில் நடந்த ‘ஜி-7’ மாநாட்டில் மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் கிண்டல் செய்தனர்.இது பற்றி பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், ‘நாங்களும் உடைகளை கழற்றினால் புடினை விட வலிமையானவர்கள் என்பது … Read more

உதய்பூர் படுகொலை சம்பவம்: பயங்கரவாதிகளுக்கு தொடர்பு – முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை

பெங்களூரு, பெங்களூருவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய தையல்காரரான கன்னையா லால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த படுகொலை பயங்கரவாதத்தின் ஒரு பாகம் ஆகும். இதற்கு பின்னணியில் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதற்கான சந்தேகங்கள் உள்ளது. இதற்கு பின்னால் சர்வதேச அளவில் சதிநடந்திருக்கிறது. தையல்காரர் படுகொலைக்கு பின்னால் இருப்பவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க வேண்டும். இந்த படுகொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளை தூக்கில் விட … Read more

இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

லண்டன், ஒரு டெஸ்ட், மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. இதனிடையே கடந்த ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட இந்தியா- இங்கிலாந்து கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்குகிறது. இந்த ஒரே டெஸ்ட் 2021-ம் ஆண்டு கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்ட போட்டியாகும். கடந்த ஆண்டு ஆகஸ்டு- செப்டம்பரில் இந்திய அணி இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் முதல் 4 டெஸ்டுகளில் … Read more