லாரி டிரைவர் திடீரென லாரி முதலாளி ஆன அதிசயம்… உண்மையிலேயே இது ஜாக்பாட் தான்

ஒவ்வொரு லாரி டிரைவருக்கும் நாம் ஒருநாள் லாரி ஓனர் ஆக வேண்டும் என்ற கனவு இருக்கும். ஆனால் அந்த கனவு பெரும்பாலானோர்களுக்கு நிறைவேறாமலேயே போய்விடும்.

அந்த கனவு தற்போது அமெரிக்காவில் உள்ள லாரி டிரைவர் ஒருவருக்கு நனவாகியுள்ளது என்ற செய்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் அவர் வாங்கிய லாட்டரிக்கு 1 மில்லியன் டாலர் பரிசு கிடைத்ததை அடுத்து லாரி டிரைவராக இருந்த அவர் லாரி ஓனர் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐடி ஊழியர்களுக்குக் குட்நியூஸ்.. ஹெச்1பி விசா-வின் 3வது லாட்டரி தேர்வில் சர்ப்ரைஸ்..!!

அமெரிக்க லாரி டிரைவர்

அமெரிக்க லாரி டிரைவர்

அமெரிக்காவை சேர்ந்த மிக்சிகன் என்ற மாகாணத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் லாரியில் சரக்கு ஏற்றிக்கொண்டு மட்டாவன் என்ற பகுதிக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது ஒரு பெட்ரோல் நிலையத்தில் அவர் லாரிக்கு பெட்ரோல் போட்டுவிட்டு அதன் அருகில் உள்ள கடையில் லாட்டரி டிக்கெட் வாங்கினார். அந்த லாட்டரி டிக்கெட் தான் அவருடைய எதிர்காலத்தை புரட்டிப்போடும் என்று அவர் அப்போது கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை.

 2000 டாலர் பரிசு

2000 டாலர் பரிசு

இந்த நிலையில் லாட்டரி டிக்கெட்டுகள் முடிவுகள் வெளிவந்த பின்னர் அவர் பார் கோடை ஸ்கேன் செய்து பார்த்தபோது 2 ஆயிரம் டாலர் பரிசுத் தொகை கிடைத்துள்ளதாக தகவல் கிடைத்தது. 2000 டாலர் என்பது இந்திய மதிப்பில் ஒன்றரை லட்ச ரூபாய் என்பதால் அவர் மிகுந்த ஆவலுடன் அந்த பணத்தை பெறுவதற்காக காத்திருந்தார்.

திடீர் சர்ப்ரைஸ்
 

திடீர் சர்ப்ரைஸ்

இந்த நிலையில் அவருக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருந்தது. அவருடைய லாட்டரி சீட்டுக்கு கிடைத்த பரிசுத் தொகை 2000 டாலர் அல்ல என்றும் 1 மில்லியன் டாலர் என்றும் தெரியவந்தது. இதனால் அவர் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றார். 1 மில்லியன் டாலர் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் 7.5 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

 லாட்டரி பரிசு

லாட்டரி பரிசு

மேலும் லாட்டரி அலுவலகத்தை தொடர்பு கொண்டு தனக்கு உண்மையாகவே எவ்வளவு பரிசு கிடைத்துள்ளது என்று அவர் கேள்வி எழுப்பியபோது, அவருடைய லாட்டரிக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசு கிடைத்து இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து சமீபத்தில் அவருக்கு பரிசு தொகை முழுவதையும் வரி பிடித்தம் போக மீதித்தொகை வழங்கப்பட்டது.

சொந்த லாரி

சொந்த லாரி

லாட்டரி பரிசு விழுந்த பணத்தில் அவர் சொந்த லாரி வாங்குவதற்கு முடிவு செய்துள்ளதாகவும் விரைவில் அவர் லாரி ஓனர் ஆகிவிடுவார் என்றும் செய்தி வெளியாகியுள்ளது. மேலும் இந்த பணத்தை வைத்து தனது குடும்பத்தினரை வசதியாக வைத்துக் கொள்வேன் என்றும் மீதி பணத்தை சேமித்து தனக்கு தன்னுடைய குடும்பத்தின் எதிர்காலத்திற்கு பாதுகாப்பாக வைத்துக் கொள்வேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

நனவாகிய கனவு

நனவாகிய கனவு

சொந்தமாக லாரி வாங்க வேண்டும் என்பது தனது 30வருட கனவு என்றும் ஆனால் அது தன்னுடைய வாழ்க்கையில் நிறைவேறாமல் போய்விடுமோ என்று இருந்தபோது தற்போது தனக்கு லாட்டரி மூலம் அந்த கனவு நனவாகி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

US Truck Driver Won $1 Million Lottery, and become owner of Truck!

US Truck Driver Won $1 Million Lottery, and become owner of Truck! | லாரி டிரைவர் திடீரென லாரி முதலாளி ஆன அதிசயம்… உண்மையிலேயே இது ஜாக்பாட் தான்

Story first published: Monday, July 4, 2022, 8:39 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.